பக்ஹர் ஸமானுக்கு பதிலாக பாகிஸ்தான் அணியில் இணையும் வீரர்!

ICC T20 World Cup 2022

298

T20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் குழாத்தில் உபாதைக்கு முகங்கொடுத்துள்ள பக்ஹர் ஸமானுக்கு பதிலாக மொஹமட் ஹரிஸ் இணைக்கப்பட்டுள்ளார்.

உபாதை காரணமாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் குழாத்தில் பக்ஹர் ஸமான் இடம்பெற்றிருக்கவில்லை. எனினும், உபாதை மாற்றீடு வீரராக இவர் அணியில் மீண்டும் இடம்பிடித்திருந்தார்.

>> T20 உலகக் கிண்ண தொடரில் மஹேலவின் சாதனையினை முறியடித்த விராட் கோலி

பக்ஹர் ஸமானுடைய வலது முழங்கால் பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்த உபாதை காரணமாகவே (posterior cruciate ligament) T20 உலகக் கிண்ணத்தின் ஆரம்ப குழாத்தில் இவர் இணைக்கப்படவில்லை. இந்தநிலையில் இந்த உபாதை காரணமாகவே இவர் மீண்டும் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

பக்ஹர் ஸமான் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக துடுப்பாட்ட வீரர் மொஹமட் ஹரிஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

மொஹமட் ஹரிஸ் பாகிஸ்தான் அணிக்காக இதுவரையில் ஒரு T20i போட்டியில் மாத்திரமே விளையாடியுள்ளார். அவர் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான T20i போட்டியில் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<