கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்கான எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் 5 தடவைகள் குறித்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவூப்புக்கு 6ஆவது தடவையாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் – 19 வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, பாகிஸ்தான் அணியுடனான T20 குழாத்தில் இணைந்துகொள்ள இன்று (31) அவர் இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட், மூன்று T20i போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
பாகிஸ்தான் அணியில் இணையவுள்ள ஆமிர், சொஹைப் மலிக்
இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான 29 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட்டது. வீரர்கள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் என அனைவருக்கும் கொவிட் – 19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 10 வீரர்களுக்கு கொவிட் – 19 வைரஸ் இருப்பது முதலில் உறுதியானதுடன், இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் அணியில் குறித்த 10 வீரர்களும் இடம்பெறவில்லை. இதற்குப் பதிலாக 5 மாற்று வீரர்கள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்கள்.
இதனிடையே, 10 வீரர்களில் ஆறு பேருக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் – 19 வைரஸ் இல்லை என முடிவு வந்ததால் அவர்கள் இங்கிலாந்துக்கு சென்று பாகிஸ்தான் அணியுடன் இணைந்து கொண்டனர்.
Video – IPL எதிர் LPL…! எது கெத்து? |Sports RoundUp – Epi 125
பிறகு மூன்று வீரர்கள் குறித்த வைரஸ் தொற்றிலிலுந்து மீண்டு இங்கிலாந்து சென்ற நிலையில், பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்திருந்த இளம் வேகப் பந்துவீச்சாளரான ஹாரிஸ் ரவூப் மாத்திரம் கொவிட் – 19 வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து முடிவுகள் வந்தன.
இதில் அவருக்கு ஐந்து தடவைகள் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டதில் ஐந்து தடவைகளும் வைரஸ் தொற்று இருப்பது என உறுதிப்படுத்தப்பட்டது.
இதில் சிறப்பம்சம் என்னவெனில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொவிட் – 19 வைரஸுக்கான எந்த அறிகுறிகளும் அவரிடம் இல்லை என முடிவு வந்தது.
Can’t thank enough Allah for the blessings He bestowed upon me during my tough times & fight against the epidemic COVID-19.
الحمدلله tested negative and feeling absolutely fine and well. Thank you everyone who extended their prayers & well wishes.— Haris Rauf (@HarisRauf14) July 30, 2020
இதனிடையே, சொந்த காரணங்களுக்காக பாகிஸ்தான் அணியில் இருந்து விலகிக் கொண்ட மொஹமட் ஆமிர், ஹாரிஸ் ரவூப்வுக்குப் பதிலாக மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.
இந்த நிலையில், ஹாரிஸ் ரவூப்புக்கு இறுதியாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு பி.சி.ஆர் பரிசோதனைகளிலும் அவருக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.
இதன் காரணமாக, அவர் இன்றைய தினம் (31) இங்கிலாந்து சென்று பாகிஸ்தான் அணியுடன் இணைந்து கொள்வார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.