இலங்கையின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சரான நாமல் ராஜபக்ஷ அரசியல் தலையீடு, ஊழல்கள் இல்லாத விளையாட்டு சூழ்நிலை ஒன்றை இலங்கையில் முன்னெடுக்க வேண்டும் என இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான ஹரின் பெர்னாந்து தெரிவித்திருக்கின்றார்.
இலங்கையின் சகல விளையாட்டையும் அபிவிருத்தி செய்வேன் – நாமல் ராஜபக்ஷ
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் காலத்தில், விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ஹரின் பெர்னாந்து கடந்த வாரம் நடைபெற்ற பொதுத் தேர்தல்களை அடுத்து புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷவிற்கு தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கு மூலமாக வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இவ்வாறு வாழ்த்து தெரிவிக்கும் சந்தர்ப்பத்திலேயே ஹரின் பெர்னாந்து புதிய விளையாட்டுத்துறை அமைச்சரான நாமல் ராஜபக்ஷவிற்கு, இலங்கையில் அரசியல் தலையீடுகள், ஊழல்கள் இல்லாத விளையாட்டுக்கான சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
”நான் நாமல் ராஜபக்ஷவிற்கு அவரது புதிய அமைச்சரவைப் பதவியான விளையாட்டுத்துறை அமைச்சர் பதவிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நாங்கள் உருவாக்கிய அரசியல் தலையீடுகள், ஊழல்கள் இல்லாத ஒரு விளையாட்டு சூழ்நிலையிலையினை அவர் தொடர்ந்தும் முன்னெடுக்க வேலை செய்வார் என நம்புகின்றேன்.” எனக் குறிப்பிட்ட ஹரின் பெர்னாந்து நாமல் ராஜபக்ஷ விளையாட்டு வீரராக இருந்த போது எப்படி சிறந்த நிலையில் இருந்தாரோ அது போன்று சிறந்த விடயங்கள் இனியும் தொடரும் என்பதில் உறுதியுடன் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இது தவிர ஊடக சந்திப்பு ஒன்றிலும் கருத்து வெளியிட்ட ஹரின் பெர்னாந்து, தமது ஆட்சிக்காலத்தில் இலங்கையின் விளையாட்டு வளர்ச்சிக்காக தாம் முன்னெடுத்த திட்டங்களை நாமல் ராஜபக்ஷ தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
Video – IPL தொடரின் மறுவடிவமா? LPL | Cricket Galatta Epi 32
இதேவேளை, புதிய விளையாட்டுத்துறை அமைச்சரான நாமல் ராஜபக்ஷ தான் பதவிப்பிரமாணம் மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கும் நிகழ்வு ஒன்றில் பேசியிருந்த போது தான் நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டுக்களின் அபிவிருத்திக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல விளையாட்டுச் செய்திகளைப் படிக்க<<