ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான இந்திய அணியில் இருந்து அதன் முன்னணி சகலதுறைவீரர்களில் ஒருவரான ஹார்திக் பாண்டியா வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>> மோசமான ஆட்டத்திற்காக விளக்கம் கோரும் இலங்கை கிரிக்கெட் சபை
ஹார்திக் பாண்டியா இந்த உலகக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷிற்கு எதிராக நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் கரண்டைக் கால் உபாதைக்கு முகம் கொடுத்திருந்தார். இந்த உபாதையில் இருந்து அவருக்கு மீள முடியாத நிலையிலையே ஹார்திக் பாண்டியா, உலகக் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஹார்திக் பாண்டியா இல்லாத நிலையில் அவரின் பிரதியீட்டு வீரராக பிரசித் கிரிஷ்னா இந்திய குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றார். இதுவரை 17 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கும் அவர் 29 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றார்.
இதேவேளை உபாதைக்கு ஆளான ஹார்திக் பாண்டியா பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமிக்கு உபாதைகளில் இருந்து மீளக் குணமடைவதற்காக அனுப்பப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
>> முன்னணி வீரர்களை இழக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி
இதுவரை உலகக் கிண்ணத் தொடருக்காக ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கம் இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்காவினை எதிர்கொள்ளவுள்ளதோடு குறித்த போட்டி நாளை (05) கொல்கத்தாவில் ஆரம்பமாகின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<