இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரரான ஹர்திக் பாண்டியா, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20I போட்டித் தொடர்களில் விளையாட மாட்டார் என இந்திய கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஐ.பி.எல் 2019 முதல் போட்டியில் விராட் கோஹ்லி – எம்.எஸ் டோனி மோதல்
2019 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல்…
ஹர்திக் பாண்டியாவின் முதுகின் கீழ்ப்பகுதியில் ஏற்பட்டுள்ள பிடிப்புத்தன்மை காரணமாக, அவர் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது உபாதைக்கு முகங்கொடுத்துள்ள ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சு சகலதுறை வீரரான ரவீந்திர ஜடேஜா அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இணைக்கப்பட்டுள்ளார்.
ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராஹுல் ஆகிய வீரர்கள் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அறுவறுக்கத்தக்க கருத்துகளை வெளியிட்டிருந்தமையால், நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டனர். எவ்வாறாயினும், தற்காலிக தடை விரைவாக நீக்கப்பட்ட நிலையில், பாண்டியா நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடியிருந்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா, அணியின் தொடர் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருந்தார். இதன் காரணமாக அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இணைக்கப்பட்ட இவர் உபாதை காரணமாக தற்போது வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஹர்திக் பாண்டியா கடந்த வருடம் நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் கடுமையான முதுகுப்பகுதி உபாதைக்கு முகங்கொடுத்தார். இதன் பின்னர், நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20I தொடர்களிலிருந்து முழுமையாக வெளியேறியிருந்தார். எனினும், உபாதை குணமடைந்து அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் அணியுடன் இணைந்துக்கொண்ட இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெளியிட்டிருந்த முரண்பட்ட கருத்துக்கள் காரணமாக கே.எல்.ராஹுலுடன் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டார்.
ஓய்வு வழங்கப்பட்டிருந்த விராட் கோஹ்லி மீண்டும் இந்திய அணியில்
அவுஸ்திரேலிய அணியுடன் சொந்த…
தற்போது உபாதைக்கு முகங்கொடுத்துள்ள ஹர்திக் பாண்டிய அவுஸ்திரேலிய தொடரில் விளையாட மாட்டார் என்பதை கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளதுடன், அவர் வலிமை மற்றும் உடல் சீரமைப்பு பயிற்சிகளில் ஈடுபடுவதற்காக அடுத்த வாரம் பெங்களூரில் அமைந்துள்ள தேசிய கிரிக்கெட் பயிற்சி பாசறைக்கு (அக்கடமி) செல்லவுள்ளார் என்பதையும் உறுதிசெய்துள்ளது.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 2ம் திகதி ஹைதராபாத்தில் ஆரம்பமாகவுள்ளது.
முதலிரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான குழாம்
விராட் கோஹ்லி (அணித்தலைவர்), ரோஹிட் சர்மா, சிகர் தவான், அம்பத்தி ராயுடு, கேதார் ஜாதவ், எம்.எஸ் டோனி, ரவீந்திர ஜடேஜோ, ஜஸ்பிரிட் பும்ரா, முஹம்மட் ஷமி, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், விஜய் சங்கர், ரிஷாப் பண்ட், சித்தார்த் கௌல், கே.எல் ராஹுல்
இறுதி மூன்று ஒருநாள் போட்டிகளுக்குமான குழாம்
விராட் கோஹ்லி (அணித்தலைவர்), ரோஹிட் சர்மா, சிகர் தவான், அம்பத்தி ராயுடு, கேதார் ஜாதவ், எம்.எஸ் டோனி, ரவீந்திர ஜடேஜோ, ஜஸ்பிரிட் பும்ரா, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், முஹம்மட் ஷமி, விஜய் சங்கர், ரிஷாப் பண்ட், கே.எல் ராஹுல்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<