T20 தரவரிசையில் வனிந்துவை முந்திய ஹர்திக் பாண்டியா

15
Hardik Pandya

ஐசிசி T20 சகலதுறை வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா முதலிடம் பிடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.  

இதன் மூலம் T20 சகலதுறை வீரர்கள் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்திக் பாண்டியா பெற்றுள்ளார். 

ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 9ஆவது அத்தியாயம் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்றது. இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது 

இந்த நிலையில், ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடர் நிறைவடைந்ததை அடுத்து T20 வீரர்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி, ஐசிசி T20 சகலதுறை வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் உதவித் தலைவர் ஹர்திக் பாண்டியா முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். 

நடைபெற்று முடிந்த T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரு துறைகளிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா, இந்திய அணி இம்முறை சம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார் 

அதுமட்டுமின்றி இந்தாண்டு T20 உலகக் கிண்ணத் தொடரில் துடுப்பாட்டத்தில் 144 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலம், இந்திய அணிக்காக T20 உலகக் கிண்ணத் தொடரில் 100 இற்கும் மேற்பட்ட ஓட்டங்கள் மற்றும் 10 இற்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் சகலதுறை வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். இதன் காரணமாக அவர் தற்போது சகலதுறை வீரர்கள் தரவரிசையிலும் முதலிடம் பிடித்து சாதித்துள்ளார் 

இதனிடையே, T20 சகலதுறை வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் வனிந்து ஹஸரங்க இவருடன் சேர்ந்து முதலிடத்தை இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க பகிர்ந்துள்ளார். இருவரும் 222 புள்ளிகளுடன் உள்ளனர். 

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டொய்னிஸ் மூன்றாம் இடத்திற்கும், ஜிம்பாப்வேவின் சிக்கந்தர் ராஸா 4ஆம் இடத்திற்கும், பங்களாதேஷ் அணியின் சகிப் அல் ஹசன் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேசமயம், கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் அணியின் மொஹமட் நபி 4 இடங்கள் பின் தங்கி 6ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் 

இதேவேளை, புதுபிக்கப்பட்ட T20 துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலின் முதல் 5 இடங்களில் எந்தவித மாற்றங்களும் இடம்பெறவில்லை. அதன்படி அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார் 

இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்தின் பில் சோல்ட் மூன்றாம் இடத்திலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஆகியோர் முறையே 4ஆம் மற்றும் 5ஆம் இடங்களில் நீடிக்கின்றனர் 

மேலும் இந்த புதுபிக்கப்பட்ட T20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்ட்ஜே 7 இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். மேலும் இப்பட்டியலின் முதலிடத்தில் இங்கிலாந்தின் ஆடில் ரஷித் மற்றும் இலங்கையின் வனிந்து ஹஸரங்க இரண்டாம் இடத்தில் நீடித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இப்பட்டியலின் முதல் 10 இடங்களில் இந்திய அணியின் அக்ஸர் படேல் 7ஆம் இடத்தையும், குல்தீப் யாதவ் 9ஆம் இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர். 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<