40 வயதானாலும் என்னால் சாதிக்க முடியும் – ஹர்பஜன் சிங்

195
AFP

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், ஐ.பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருபவருமான ஹர்பஜன் சிங், இவ்வருடம் நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடருக்குப் பிறகு கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைகொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

எனினும், தனக்கு 40 வயதாகினாலும் இளம் வீரர்களைப் போல தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுகின்ற உடற்தகுதி தன்னிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வீரர்களுக்கு டுபாயில் பயிற்சி

இந்திய அணிக்காக 1997ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகின்ற சுழல் பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங், இளம் வயதிலேயே சவுரவ் கங்குலியின் தலைமையில் விளையாடி பல போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர்

2016 ஆம் ஆண்டு முதல் இதுவரை இந்தியாவுக்காக எந்தவொரு போட்டியிலும் விளையாடாத அவர். .பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடி வந்தார்.  

இந்நிலையில், 40 வயதான இவர் மிக விரைவில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. எனினும், முதல்முறையாக தனது ஓய்வு குறித்து ஹர்பஜன்சிங் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில் கருத்து வெளியிடுகையில்,

நீங்கள் என் திறமையை எப்போது வேண்டுமானாலும் பரிசோதிக்கலாம். நீங்கள் கருதும் சிறந்த வீரரை என் முன் நிறுத்துங்கள். அவரது திறமையுடன் நான் போட்டியிட தயார். பந்தை பிடிக்கும் போது கால்களுக்கு இடையில் பந்தை விட்டாலோ, அல்லது குனிய முடியாமல் பந்தை தவறவிட்டாலும் அதன் பின்னர் எனது தகுதியைப் பற்றிப் பேசலாம்.

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு நகரும் IPL தொடர்

நான் இந்திய அணியின் சீருடை அணிந்து 800 நாட்களுக்கு மேல் களத்தில் நின்று விளையாடி உள்ளேன். நான் சாதனை படைத்த எனக்கு யாருடைய அனுதாபமும் தேவைப்படுவதில்லை. எனக்கு வயதாகிவிட்டது என்று நினைக்க வைக்க முயற்சி செய்கிறார்கள்.

அசாருதின் தலைவராக இருக்கும் போதே இந்திய அணிக்காக விளையாட ஆரம்பித்தேன். 20 வருடங்கள் விளையாடிவிட்டு இதுதான் எனது கடைசி .பி.எல் போட்டியாக இருக்கும் என்று நினைக்காதீர்கள்.  

எனது உடல் நிலையைப் பொறுத்துதான் முடிவு எடுப்பேன். 2013ஆம் ஆண்டு எப்படி 24 விக்கெட்டுகள் வீழ்த்தினேனோ அதுபோன்றே தற்போதும் இருக்கிறேன் என்று ஹர்பஜன்சிங் கூறியுள்ளார்.

எனவே ஹர்பஜன்சிங் இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேல் விளையாடுவார் என்று தெரிகிறது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…