இந்தியாவில் நடைபெறும் 9ஆவது ஐ.பி.எல் தொடரில் 10இற்கும் அதிகமான வீரர்கள் உபாதை காரணமாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியில் இடம்பெற்று இருந்த நியுசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் எடம் மிலேன் பின் தொடையில் இருக்கும் தசை நார் உபாதை காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரானார் மிக்கி ஆர்தர்
கடந்த சனிக்கிழமை பூனே அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பதாக பெங்களூர் அணியின் பயிற்சிக்கு எடம் மிலேன் சமூகமளிக்கவில்லை. வலது தொடையில் இருக்கும் தசை நார் உபாதை காரணமாக அவர் சில நாட்களுக்கு முன்பே இந்தியாவை விட்டு சென்றுள்ளார். இவ்வாறு வெளியேறியுள்ள மிலேனிற்குப் பதிலாக இன்னும் ஒரு வீரரை பெங்களூர் அணி இன்னும் முடிவு செய்யவில்லை.
ஏற்கனவே ஆரம்பப் போட்டிகளில் பெங்களூர் அணியின் திறமையற்ற விளையாட்டிற்கு காரணம் பலவீனமடைந்தத பந்து வீச்சே! இதனால் மிலேனின் விலகல் பெங்களூர் அணிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்