தம்புள்ளை வைகிங்ஸ் அணிக்கு புதிய பெயர், புதிய உரிமையாளர்

478

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் தம்புள்ளை நகரினை மையமாகக் கொண்டு பங்கேற்கும் அணிகளில் ஒன்றான, தம்புள்ளை வைகிங்ஸ் தம்புள்ளை ஜயன்ட்ஸ் (Dambulla Giants) என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.

இலங்கையில் பெண்களுக்கான சர்வதேச T-20 லீக் தொடர்

ஐந்து அணிகள் பங்குபெறும் லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் இரண்டாவது பருவகாலத்திற்கான போட்டிகள் இந்த ஆண்டின் (2021) இறுதிப்பகுதியில் நடைபெறவுள்ள நிலையில், இந்த ஆண்டு தொடரில் தம்புள்ளை நகரினை பிரதிநிதித்துவம் செய்து பங்கேற்கவுள்ள அணியே, தம்புள்ளை ஜயன்ட்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. 

லண்டன் நகரினை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஹம்ரோ நிறுவனத்தினைச் சேர்ந்த கமர் கான் தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணியினை கொள்வனவு செய்த பின்னரே, தம்புள்ளை வைகிங்ஸ் அணி தம்புள்ளை ஜயன்ட்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. 

IPL தொடரில் சமீர, ஹஸரங்க விளையாடுவதற்கு SLC அனுமதி!

இதேநேரம், தசுன் ஷானக்க தலைமையிலான தம்புள்ளை வைகிங்ஸ் அணி பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் விடயத்தினை லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஏற்பாட்டாளர்களான IPG நிறுவனம் உறுதி செய்திருப்பதுடன், தம்புள்ளை ஜயன்ட்ஸ அணியின் புதிய உரிமையாளர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<