நெதன் லயனின் ஒப்பந்தத்தை இரத்துசெய்த ஹெம்ஷையர்

138
Nathan Lyon
Nathan Lyon

அவுஸ்திரேலிய அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் நெதன் லயனின் ஹெம்ஷையர் கிரிக்கெட் கழகத்துடனான  இந்த பருவகாலத்துக்கான ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்த பருவகாலத்தில் நடைபெறவுள்ள கௌண்டி சம்பியன்ஷிப் தொடரில் ஹெம்ஷையர் கிரிக்கெட் கழகத்தின் முழு பருவகாலத்திற்காகவும் நெதன் லயன்   ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

கௌண்டி அணியிலிருந்து நீக்கப்பட்ட செட்டேஸ்வர் புஜாரா!

இங்கிலாந்தில் நடைபெறவிருந்த கௌண்டி கிரிக்கெட் தொடரில் க்ளொஸ்செஷ்டர்ஷையர்…

எனினும், கொவிட்-19 வைரஸ் காரணமாக  இங்கிலாந்தில் நடைபெறவிருந்த கௌண்டி சம்யின்ஷிப் தொடர் எதிர்வரும் மாதம் 28ம் திகதிவரை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முழுமையான தொடருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நெதன் லயன் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

நெதன் லயன் ஹெம்ஷையர் அணியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில், அந்த அணியின் பணிப்பாளர் கில்ஸ் வைட் கருத்து தெரிவிக்கையில், “இது கிரிக்கெட்டுக்கு ஒரு சவாலான காலப்பகுதி. குறிப்பாக கௌண்டி கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், போட்டியை நடத்துவதற்கான ஆயத்தங்கள் இதுவரை செய்யப்படவில்லை. 

இதன் காரணமாக நாம் நெதன் லயனுடன் இணைந்து கலந்துரையாடி ஒருமனதாக அவருடைய இந்த பருவகாலத்துக்கான ஒப்பந்தத்தை நீக்குவதற்கு முடிவுசெய்துள்ளோம். எனவே, இம்முறை கௌண்டி சம்பியன்ஷிப்பில் எமது அணிக்காக அவர் விளையாட மாட்டார்.

பங்களாதேஷ்-அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு

எதிர்வரும் ஜூன் மாதம் பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள்…

அதேநேரம், எமது ஒப்பந்தத்தை அறிந்துக்கொண்டு செயற்பட்ட நெதன் லயனுக்கு எமது அணியின் சார்பில், நன்றிகளை தெரிவித்துக்கொண்டு, அடுத்த பருவகாலத்தில் அவர் எமது அணிக்காக விளையாடுவார் என நம்புகிறேன்” என்றார். 

கொவிட்-19 வைரஸ் காரணமாக இங்கிலாந்தில் நடைபெறவிருந்த கௌண்டி சம்யின்ஷிப் தொடர் எதிர்வரும் மே மாதம் 28ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், அணிகள் தங்களது அணிகளில் இணைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு வீரர்களின் ஒப்பந்தத்தை இரத்து செய்து வருகின்றன. 

இந்த நிலையில், ஏற்கனவே க்ளொஸ்செஷ்டர்ஷையர் அணியில் இணைக்கப்பட்டிருந்த இந்திய அணியின் வீரர் செட்டேஸ்வர் புஜார மற்றும் சர்ரே அணிக்காக இணைக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலிய வீரர் மைக்கல் நீசம் ஆகியோரின் ஒப்பந்தங்கள் இரத்துசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

 >> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<