இங்கிலாந்து கவுண்டி அணியான ஹாம்சயர் அணிக்கு விளையாடி வந்த ஹம்சா அலி என்ற 20 வயது நிரம்பிய வீரர் மரணமடைந்துள்ளார்.
1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 08ஆம் திகதி இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் பிறந்த ஹம்சா ஷாபிர் என்ற மறுபெயரைக் கொண்ட ஹம்சா அலி நேற்று மாலை 5 மணியளவில் வார்விக்ஷைர் நகரில் உள்ள அவொன் என்ற நதியில் விழுந்ததன் மூலமே இவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
லோர்ட்ஸ் மைதானத்தில் மணியடித்தார் சங்கா
இந்த சம்பவத்தின் பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஹம்சா அலிக்கு அவசர முதலுதவி கொடுக்கப்பட்டாலும் அது பலனளிக்காமல் இன்று அதிகாலையில் உயிரிழந்துள்ளார்.
ஹம்சா அலியின் இறந்த செய்தி தொடர்பில் அவர் விளையாடிய ஹாம்சயர் கிரிக்கட் சபை தமது ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல்தர கிரிக்கட் போட்டிகளில் அறிமுகமான ஹம்சா அலி தான் விளையாடிய ஒரே ஒரு போட்டியில் கார்டிப் MCCU அணிக்கு எதிராக 47 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தமை முக்கிய அம்சமாகும்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்