புற்றுநோய்க்கு ஆளாகினார் மைகல் கார்பெரி

323
Hampshire announce

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரருக்கு புற்றுநோய் இருப்பதை அந்நாட்டை சேர்ந்த Hampshire கிரிக்கெட் கழக அணி உறுதி செய்துள்ளது.

இங்கிலாந்தின் இடதுகைத் துடுப்பாட்ட வீரரான மைகல் கார்பெரி, இந்த வாரம் அந்நாட்டில் நடந்த County Championship கிரிக்கெட் போட்டியில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் போட்டியில் பங்கேற்கவில்லை.

இதனால் மைகல் கார்பெரி உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது அவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக Hampshire கழகத்தின் தலைவர் ரோட் பிரான்ஸ்குரோவ் கூறுகையில், இது போன்ற மோசமான சூழ்நிலையில் மைகல் கார்பெரி அவரது குடும்பத்துடன் சேர்ந்து இருக்கவேண்டும்.

மேலும், அவர் விரைவில் குணமாகி கிரிக்கெட் உலகிற்கு வரவேண்டும் என கூறியுள்ளார்.

இதனையறிந்த கிரிக்கெட் பிரபலங்களான அவுஸ்திரேலியாவின் ஷேன் வார்னே, இங்கிலாந்தின் ரோட் பிரான்ஸ்குரோவ், இயான் பெல், மைக்கேல் வாகன் ஆகியோர் மைகேல் கார்பெரி விரைவில் குணமாகி கிரிக்கெட் உலகிற்கு வர வேண்டும் என வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

35 வயதான மைல்கல் கார்பெரி இங்கிலாந்து அணிக்காக 6 ஒருநாள், 6 டெஸ்ட் மற்றும் 1 டி20 போட்டியில் ஆடியுள்ளார்.

கடந்த 2010-2011ம் ஆண்டில் நுரையீரல் மற்றும் இரத்தகட்டி பிரச்சனை காரணமாக அவர் இங்கிலாந்து தொடரை தவறவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்லங்காசிறி