பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு எதிராக இன்று (15) டாக்காவில் ஆரம்பமாகவுள்ள T-20 தொடருக்கான இலங்கை குழாமில் இருந்து சகலதுறை ஆட்டக்காரர் அசேல குணரத்ன விலகியுள்ளார்.
[rev_slider LOLC]
நேற்று இடம்பெற்ற களத்தடுப்பிற்கான பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த அசேல குணரத்ன பாயும்பொழுது, அவரது வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. குறித்த காயத்தின் நிலைமை மோசமடைந்துள்ளமையினால் அவர் இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்த T-20 தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.
பங்களாதேஷுடனான T-20 தொடரில் குசலுக்குப் பதிலாக குசல்
பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு எதிரான T-20…
இந்நிலையில் அவர் MRI ஸ்கேன் மற்றும் காயத்தில் இருந்து மீள்வதற்கான சிகிச்சைகள் என்பவற்றை மேற்கொள்வதற்காக பங்களாதேஷில் இருந்து இன்று பிற்பகல் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பங்களாதேஷ் சுற்றுப் பயணத்தில் ஏற்கனவே இடம்பெற்று முடிந்த முக்கோண ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர் என்பவற்றை இலங்கை அணி வென்றுள்ளது. இந்நிலையில் பதில் தலைவர் தினேஷ் சந்திமாலின் தலைமையின் கீழ் இந்த T-20 தொடரையும் வெல்லும் நோக்கில் இலங்கை அணி உள்ளது.
இவ்வாறான ஒரு நிலையில், இலங்கை அணியின் ஆரம்ப அதிரடித் துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேராவும் உபாதை காரணமாக இத்தொடரில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக குசல் மெண்டிஸ் அணிக்கு உள்வாங்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தற்போதைய இறுதி நேரத்தில் அசேல குணரத்னவும் அணியில் இருந்து விலகியுள்ளார்.
இலங்கையின் வெற்றியோட்டம் பங்களாதேஷுடனான T-20 போட்டிகளிலும் தொடருமா?
தாகத்தில் இருந்த ஒருவருக்கு நீர் ஊற்று ஒன்றினைக்…
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இறுதியாக இலங்கையில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின்போது அசேல குணரத்ன உபாதைக்கு உள்ளானார். அதன் பின்னர் நீண்ட கால ஓய்வைப் பெற்ற அவர் அண்மையில் இந்தியாவில் அவ்வணியுடன் இடம்பெற்ற ஒரு நாள் தொடரிலேயே இலங்கை அணியுடன் மீண்டும் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறிருப்பினும், சகலதுறை வீரரான அசேல குணரத்னவின் விலகல் இலங்கை அணிக்கு பாரிய ஒரு இழப்பாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அசேலவுக்குப் பதிலாக யாரை அணியில் இணைத்துக்கொள்வது என்பது தொடர்பில் இன்னும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
அசேலவுக்குப் பதிலாக அணியில் யாரை இணைக்கலாம். உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்.