எதிர்வரும் 2023ஆம் ஆண்டு சீனாவில் இடம்பெறவுள்ள AFC ஆசிய கிண்ண கால்பந்து சம்பியன்ஷிப்பிற்குரிய, தகுதிகாண் தொடரின் இறுதிச் சுற்றுக்குரிய அணிகள் நிரல்படுத்தல் மலேஷியாவின் கோலாலம்பூர் நகரில் இடம்பெற்றிருக்கின்றது.
>> சுதந்திர கிண்ண அரையிறுதிப் போட்டிகள் விபரம் வெளியீடு
மொத்தம் 24 நாடுகளின் கால்பந்து அணிகள் பங்கெடுக்கும் இந்த தகுதிகாண் தொடரின் இறுதிச் சுற்றில் ஆறு குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டு மோதல்கள் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், ஒவ்வொரு குழுவில் இருந்தும் முதல் இடங்களைப் பெறும் ஆறு அணிகளும், இரண்டாம் இடத்தினைப் பெறும் ஐந்து சிறந்த அணிகளும், ஆசிய கிண்ண கால்பந்து சம்பியன்ஷிப்பில் விளையாடும் தகுதியினைப் பெற்றுக் கொள்ளும்.
அதேநேரம், 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கால்பந்து சம்பியன்ஷிப் தொடருக்கு சீனா, அவுஸ்திரேலியா, ஈரான், ஈராக், ஜப்பான், தென் கொரியா, லெபனான், ஓமான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், சிரியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இலங்கை கால்பந்து அணி ஆசிய கிண்ண இறுதி தகுதிகாண் சுற்றில் குழு C இல் இடம்பெற்றிருக்கின்றது. இலங்கையுடன், குழு C இற்கான தகுதிகாண் போட்டிகள் இடம்பெறவிருக்கும் உஸ்பெகிஸ்தான் மற்றும் தாய்லாந்து, மாலைதீவுகள் அணிகளும் இந்த குழுவில் இடம்பெற்றிருக்கின்றன.
அதேவேளை, ஆசிய கிண்ண கால்பந்து சம்பியன்ஷிப் தொடருக்குரிய தகுதிகாண் போட்டிகள் இந்த ஆண்டின் ஜூன் மாதம் இடம்பெறவிருக்கின்றதோடு, 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் அடுத்த ஆண்டின் ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அணிகள் விபரம்
குழு A
- ஜோர்டான்
- குவைட்
- இந்தோனேசியா
- நேபாளம்
குழு B
- மொங்கோலியா
- பலஸ்தீன்
- பிலிப்பைன்ஸ்
- யேமன்
குழு C
- உஸ்பெகிஸ்தான்
- தாய்லாந்து
- இலங்கை
- மாலைதீவுகள்
குழு D
- இந்தியா
- ஹொங்கோங்
- ஆப்கானிஸ்தான்
- கம்போடியா
குழு E
- மலேஷியா
- பஹ்ரைன்
- துர்க்மெனிஸ்தான்
- பங்களாதேஷ்
குழு F
- கிரைக்ஸ் குடியரசு
- தஜிகிஸ்தான்
- மியன்மார்
- சிங்கப்பூர்
>>மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<