யாழ்ப்பாணம் கிறாஸ்ஹொப்பர்ஸ் விளையாட்டுக் கழகமானது தமது கழகத்தின் முன்னாள் வீரர்களான ராஜசிங்கம் றொஹான் மற்றும் சிவசங்கர் ஆகியோரது ஞாபகார்த்தமாக இந்த ஆண்டு (2019) நடாத்திய நான்காவது பருவகாலத்திற்கான கிறாஸ்ஹொப்பர்ஸ் ப்ரீமியர் லீக் தொடரில் எக்ரஸிவ் போய்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.
எக்ரஸிவ் போய்ஸ் அணி கிறாஸ்ஹொப்பர்ஸ் ப்ரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்னா பெந்தர்ஸ் அணியினை 5 விக்கெட்டுக்களால் தோற்கடித்தே சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது.
Photos : Grasshoppers Premier League – 2019 | Opening ceremony and League Stage
ஜி.பி.எல் (GPL) என்ற பெயரில் சுருக்கமாக குறிப்பிடப்படும் கிறாஸ்ஹொப்பர்ஸ் ப்ரீமியர் லீக் தொடரின் இந்தப் பருவகாலத்திற்கான போட்டிகள் யாவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றிருந்தது.
அணிக்கு ஏழு பேருடன், ஐந்து ஓவர்கள் கொண்டதாக இடம்பெறும் கிறாஸ்ஹொப்பர்ஸ் ப்ரீமியர் லீக் தொடரில் இந்த ஆண்டும் ஆறு அணிகள் A, B என இரண்டு குழுக்களில் போட்டியிட்டிருந்தன.
அந்தவகையில் இம்முறை குழு A சார்பில் ஜப்னா பெந்தர்ஸ், நோர்த் ட்ராகன்ஸ் மற்றும் வேலணை வேங்கைகள் ஆகிய அணிகளும் குழு B சார்பில் டில்கோ ரைடர்ஸ், பொயின்ட் பெட்ரோ சுபர் கிங்ஸ் மற்றும் எக்ரஸிவ் போய்ஸ் ஆகிய அணிகள் தமக்கிடையே மோதல்களில் ஈடுபட்டிருந்தன.
பின்னர் தொடரின் முதற்சுற்றில் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய எக்ரஸிவ் போய்ஸ், ஜப்னா பெந்தர்ஸ், டில்கோ ரைடர்ஸ் மற்றும் நோர்த் ட்ராகன்ஸ் ஆகிய அணிகள் குவாலிபையர் சுற்றுக்கு தெரிவாகின.
Photos : Grasshoppers Premier League – 2019 | Final and awarding ceremony
குவாலிபையர் சுற்றுக்கு அமைவாக ஜப்னா பென்தர்ஸ் அணியும், எக்ரஸிவ் போய்ஸ் அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.
தொடர்ந்து இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற எக்ரஸிவ் போய்ஸ் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை ஜப்னா பெந்தர்ஸ் அணிக்கு வழங்கியது.
இதன்படி, முதலில் துடுப்பாடிய ஜப்னா பென்தர்ஸ் அணி நிர்ணயம் செய்யப்பட்ட 5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 62 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.
ஜப்னா பெந்தர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் சன்சஜன் 18 பந்துகளில் ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதேநேரம், எக்ரஸிவ் போய்ஸ் அணியின் பந்துவீச்சில் டார்வின் மற்றும் றகுலன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 63 ஓட்டங்களை 5 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய எக்ரஸிவ் போய்ஸ் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 5 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 66 ஓட்டங்களுடன் அடைந்தது.
Photos : Grasshoppers Premier League – 2019 | playoffs
எக்ரஸிவ் போய்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் சுஜாந்தன் 17 பந்துகளில் 37 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தார்.
இதேநேரம் ஜனுஷன், ஜப்னா பெந்தர்ஸ் அணிக்காக 14 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை சாய்த்திருந்தார்.
போட்டி சுருக்கம்
ஜப்னா பெந்தர்ஸ் – 62/2 (5) – சன்சனஜன் 46, டார்வின் 06/1 றகுலன் 10/1,
எக்ரஸிவ் போய்ஸ் – 66/1 (5) – சுஜாந்தன் 37, ஜனுஷன் 14/1
முடிவு – எக்ரஸிவ் போய்ஸ் 5 விக்கெட்டுக்களால் வெற்றி
தொடரின் விருதுகள்
- சிறந்த துடுப்பாட்ட வீரர் – சுஜாந்தன் (எக்ரஸிவ் போய்ஸ்)
- சிறந்த பந்துவீச்சாளர் – டார்வின் (எக்ரஸிவ் போய்ஸ்)
- சிறந்த களத்தடுப்பாளர் – வர்மன் (ஜப்னா பெந்தர்ஸ்)
- அதிக சிக்ஸர்கள் பெற்ற வீரர் – சன்சஜன் (ஜப்னா பென்தர்ஸ்)
- சிறந்த விளையாட்டினை வெளிப்படுத்திய அணி – பொயின்ட் பெட்ரோ சுபர்கிங்ஸ்
- தொடர் நாயகன் – சுஜாந்தன் (எக்ரஸிவ் போய்ஸ்)
குவாலிபையர் சுற்று முடிவுகள்
முதலாவது குவாலிபையர் போட்டி – ஜப்னா பென்தர்ஸ் எதிர் எக்ரஸிவ் போய்ஸ்
ஜப்னா பெந்தர்ஸ் – 83/2 (5) – சன்சஜன் 40*, வாமனன் 18, ஜனன்தன் 10/1
எக்ரஸிவ் போய்ஸ் – 67/3 (5) – சுஜாந்தன் 54*, பிரின்தாபன் 1/1
முடிவு – ஜப்னா பெந்தர்ஸ் 16 ஓட்டங்களால் வெற்றி
- எலிமினேட்டர் போட்டி – டில்கோ ரைடர்ஸ் எதிர் நோர்த் ட்ராகன்ஸ்
டில்கோ ரைடர்ஸ் – 89/1 (5) – மதுசன் 51*, சுரேந்திரன் 18/1
நோர்த் ட்ராகன்ஸ் – 74/2 (5) – ஜனுதாஸ் 46*, ஜெரிக் துஷாந்த் 07/1
முடிவு – டில்கோ ரைடர்ஸ் அணி 15 ஓட்டங்களால் வெற்றி
- இரண்டாவது குவாலிபையர் போட்டி – எக்ரஸிவ் போய்ஸ் எதிர் டில்கோ ரைடர்ஸ்
டில்கோ ரைடர்ஸ் – 64/6 (5) – பிரியலக்ஷன் 17, டார்வின் 07/3
எக்ரஸிவ் போய்ஸ் – 66/0 (4.4) – றகுலன் 44*, சுஜாந்தன் 15*
முடிவு – எக்ரஸிவ் போய்ஸ் 6 விக்கெட்டுக்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<