கிளென் மெக்ஸ்வேலுக்கு கொவிட்-19 தொற்று

Australia Cricket

235
Glenn Maxwell

அவுஸ்திரேலிய  அணியின் முன்னணி சகலதுறை வீரரும், பிக் பேஷ் லீக்கின் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் தலைவருமான  கிளென் மெக்ஸ்வேல் கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுத்துள்ளார்.

பிக் பேஷ் லீக்கில் மெல்போர்ன் ரெனகட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தோல்வியடைந்ததை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 ரெபிட் எண்டிஜன் பரிசோதனையின் போது, மெக்ஸ்வேலுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள கிளேன் மெக்ஸ்வேல் தனிமைப்படுத்துள்ள நிலையில், அவருடன் 12 வீரர்கள் மற்றும் 8 பயிற்றுவிப்பு ஊழியர்கள் நெருங்கிய தொடர்புக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கிளென் மெக்ஸ்வேலுக்கு கொவிட்-19 தொற்றுக்கான பிசிஆர் பிரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த பரிசோதனை முடிவுக்காக மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் வீரர்கள் சிலருக்கு ஏற்கனவே கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர். எனவே, கடந்த இரண்டு போட்டிகளில் முக்கியமான வீரர்கள் இல்லாமல், அந்த அணி பிக் பேஷ் போட்டிகளில் விளையாடியிருந்தது.

அதன்படி, ஏற்கனவே தனிமைப்படுத்தலில் இருந்த வீரர்களில் அடம் ஷாம்பா, மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் நெதன் குல்டர்-நெயில் ஆகியோரின் தனிமைப்படுத்தல் காலம் எதிர்வரும் இரண்டு நாட்களில் நிறைவடையவுள்ளதுடன், இவர்கள் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் அடுத்த போட்டிகளில் விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<