அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் கிளென் மெக்ஸ்வெல் கிரிக்கெட் உலகக்கிண்ண வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதமடித்தவர் என்ற சாதனையை பதிவுசெய்துள்ளார்.
நெதர்லாந்து அணிக்கு எதிராக நேற்று புதன்கிழமை (25) நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 309 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது.
>> இலங்கை அணியுடன் இணையும் அஞ்செலோ மெதிவ்ஸ்
போட்டியின் 39.1வது ஓவரின் போது களமிறங்கிய மெக்ஸ்வெல் வெறும் 40 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக சதத்தை (104 ஓட்டங்கள்) விளாசியிருந்தார். இதற்கு முதல் 38.4வது ஓவருக்கு பின்னர் களமிறங்கி தென்னாபிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் ஒருநாள் போட்டிகளில் சதம் விளாசியிருந்தார். குறித்த சாதனையையும் கிளென் மெக்ஸ்வல் முறியடித்துள்ளார்.
அதேநேரம் உலகக்கிண்ணத்தில் வேகமான சதத்தினை இம்முறை இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க வீரர் எய்டன் மர்க்ரம் அடித்திருந்தார். இவர் 49 பந்துகளில் சதமடித்திருந்த நிலையில் குறித்த சாதனையை தற்போது மெக்ஸ்வெல் முறியடித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேச ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை ஏபி டி வில்லியர்ஸ் 2015ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 31 பந்துகளில் சதம் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<