மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் தனது ஐந்தாவது சர்வதேச T20i சதத்தைப் பதிவுசெய்தார்.
இதன் மூலம், சர்வதேச T20i கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர் எனும் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மாவின் சாதனையை கிளென் மேக்ஸ்வெல் முறியடித்து அசத்தியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என அவுஸ்திரேலியா கைப்பற்றியது.
தற்போது 3 போட்டிகள் கொண்டT20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது T20i போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது T20i போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி, கிளென் மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 240 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது, இதனால் அவுஸ்திரேலியா 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இந்த நிலையில், குறித்த போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த கிளென் மேக்ஸ்வெல் சதமடித்து அசத்தியதுடன் 55 பந்துகளில் 12 பௌண்ட்ரிகள், 8 சிக்ஸர்கள் என 120 ஓட்டங்களை விளாசினார்.
- மேஜர் லீக் T20 தொடரில் பயிற்சியாளராகும் ரிக்கி பொண்டிங்
- அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் உயர் விருதினைப் பெற்ற மிச்சல் மார்ஷ்
இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்ததன் மூலம் சர்வதேச T20 கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர் எனும் இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மாவின் சாதனையை கிளென் மேக்ஸ்வெல் முறியடித்து அசத்தியுள்ளார். இதற்கு முன் ரோஹித் சர்மா சர்வதேச T20 கிரிக்கெட்டில் 5 சதங்களை விளாசியதே சாதனையாக இருந்த நிலையில், அதனைத் தற்போது இப்போட்டியில் சதமடித்ததன் மூலம் கிளென் மேக்ஸ்வெல் சமன்செய்து அசத்தியுள்ளார்.
சர்வதேச T20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ரோஹித் (5 சதங்கள்) சாதனையை கிளென் nமேக்ஸ்வெல் (5 சதங்கள்) பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக சூர்யகுமார் யாதவ் (4 சதங்கள்), பாபர் அசாம் (3 சதங்கள்), கொலின் முன்ரோ (3 சதங்கள்) ஆகியோர் உள்ளனர்.
மேலும், ஆட்டமிழக்காமல் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் முதல் இடத்திலும், ரோஹித் 2ஆவது இடத்திலும் உள்ளனர். இது தவிர, 4ஆவது இலக்க வீரராகக் களமிறங்கி அதிக ஓட்டங்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் (117 ஓட்டங்கள்), பாப் டு பிளெசிஸ் (119 ஓட்டங்கள்) ஆகியோரது சாதனையையும் இந்தப் போட்டியின் மூலம் கிளென் மேக்ஸ்வெல் முறியடித்துள்ளார்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<