இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கட் தொடரில் பங்கேற்கும் அவுஸ்திரேலிய அணியை அவுஸ்திரேலிய கிரிக்கட் சபை இன்று அறிவித்துள்ளது.
இதில் இந்த அணியில் இருந்து அதிரடி வீரரான கிளென் மெக்ஸ்வெல் நீக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அணிக்கு அவர் சிறப்பான பங்காற்றினாலும் கடைசி 7 ஒருநாள் போட்டிகளில் 59 ஓட்டங்களை மட்டுமே மெக்ஸ்வல் பெற்றுள்ளார். இதனால் அவர் நீக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கட் தெரிவாளர் குழு உறுப்பினர் ரோட் மார்ஷ் விளக்கம் அளித்துள்ளார்.
அதேபோல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற்ற டிராவிஸ் ஹெட், ஸ்காட் பொலண்ட் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குப் பதிலாக முதல் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் உள்ள ஷொன் மார்ஷ், மொயிசஸ் ஹென்றியூக்ஸ் ஆகியோர் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் அடுத்த மாதம் 21ம் திகதி நடக்கவுள்ளது.
அவுஸ்திரேலியா அணி வீரர்கள் விபரம்
ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர், ஜோர்ஜ் பெய்லி, நாதன் கோட்லர்-நைல், ஜேம்ஸ் பால்க்னர், ஆரோன் பின்ச், ஜொஸ் ஹாசில்வுட், மொயிசஸ் ஹென்றியூக்ஸ், உஸ்மான் காவாஜா, நாதன் லயன், மிட்செல் மார்ஷ், ஷொன் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க், மேத்தீவ் வாடே, ஆடம் ஸம்பா