9ஆவது ஐ.பி.எல் தொடரின் 51ஆவது போட்டி கான்பூர் க்ரீன் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் கவ்தம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணி சுரேஷ் ரயினா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் லயன்ஸ் அணியின் தலைவர் சுரேஷ் ரயினா முதலில் கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்புவிடுத்தார்.
குஜராத் அணியுடனான போட்டியில் ரஸல் இல்லை
இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கட் இழப்பிற்கு 124 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. நயிட் ரைடர்ஸ் அணி சார்பில் யூசப் பத்தான் 36 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கலாக 36 ஓட்டங்களையும், ராபின் உத்தப்பா 19 பந்துகளில் 25 ஓட்டங்களையும் சூர்யகுமார் யாதவ் 14 பந்துகளில் 17 ஓட்டங்களையும் பெற்றனர். லயன்ஸ் அணியின் பந்துவீச்சில் டுவயின் ஸ்மித் மிக மிக அருமையாகப் பந்து வீசி 4 ஓவர்களில் 8 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளைத் தகர்த்தார்.
பதிலுக்கு 125 என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய குஜராத் லயன்ஸ் அணி 13.3 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்று 39 பந்துகள் மீதமிருக்க 6 விக்கட்டுகளால் கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியை வெற்றி கொண்டது. லயன்ஸ் அணி சார்பில் சமீபத்தில் தந்தையான சுரேஷ் ரயினா ஆட்டம் இழக்காமல் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கலாக 53 ஓட்டங்களையும் எரொன் பின்ஞ் 23 பந்துகளில் 26 ஓட்டங்களையும் பெற்றனர். கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் ரஜ்பூட்,நரேன், மோர்கல் ஆகியோர் தாள ஒரு விக்கட் வீதம் வீழ்த்தினர். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக லயன்ஸ் அணியின் டுவயின் ஸ்மித் தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்