9ஆவது ஐ.பி.எல் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் நாளை விராத் கொஹ்லி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை டேவிட் வோர்னர் தலைமையிலான சன்ரயிசஸ் ஹைதராபாத் அணி பெங்களுர் சின்னஸ்வாமி மைதானத்தில் எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் இறுதிப்போட்டியில் பெங்களூர் அணியின் தலைவர் மற்றும் இப்பருவகால ஐ.பி.எல் தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற பெருமைக்குரிய விராத் கொஹ்லியின் விக்கட்டை வீழ்த்துவது தொடர்பில் சன்ரயிசஸ் ஹைதராபாத் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாரிடம் கேள்வியொன்று கேட்கப்பட்டுள்ளது.
அப்போது அதற்கு அவர் ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் விராத் கொஹ்லியின் விக்கட்டினை வீழ்த்த திட்டமொன்றை அணியினர் செயற்படுத்தவுள்ளதாக புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார். இந்த வருட ஐ.பி.ல் போட்டியில் அதிக விக்கட்டுகளைக் கைப்பற்றிய வரிசையில் புவனேஸ்வர் குமார் முதலிடத்தில் உள்ளார்.
விராத் கொஹ்லி சன்ரைஸஸ் அணியுடனான லீக் போட்டிகளில் முதல் போட்டியில் 14 ஓட்டங்களையும் இரண்டாவது போட்டியில் 75 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.இதில் முதல் போட்டியில் புவனேஸ்வரகுமார் விராத் கொஹ்லியின் விக்கட்டினை போல்ட் செய்து வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இறுதிப்போட்டியில் இவர்கள் இருவருக்கிடையில் சிறந்த ஒரு போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்