உண்மையான சகலதுறை வீரர் ஒருவர் எப்படி இருக்க வேண்டும்?

2159

தற்போதைய நாட்களில் கிரிக்கெட் விளையாட்டானது முழுதுமாக துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதமாகி வருகின்ற காரணத்தினால், சகலதுறை வீரர்களுக்கான தேவை ஒவ்வொரு அணிக்கும் அத்தியவசியமாகி வருகின்றது.

சகல துறை வீரர்கள் எந்தளவுக்கு பெறுமதி வாய்ந்தவர்கள் என்பதனை ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், சகிப் அல் ஹஸன் மற்றும் சொஹைப் மலிக் போன்ற வீரர்கள் தங்களது அணிகளுக்கு உணர்த்தியிருக்கின்றனர். இதில் குறிப்பாக அஷ்வினை வைத்திருக்கும் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் அவரது சிறப்பாட்டம் காரணமாக 5 விஷேட துடுப்பாட்ட வீரர்களுடன் மாத்திரமே களமிறங்குகின்றது. (எனினும் இந்திய அணிக்கு இந்த உத்தி சொந்த மண் அல்லாத இடங்களில் எப்படி உதவும் என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.)

இந்தியா மூலம் இலங்கைக்கு மற்றுமொரு வைட் வொஷ் தோல்வி

நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான, T-20 தொடரின்…

ஆனால், முன்னைய நாட்களில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கு மாத்திரமே சகல துறை வீரர்கள் தேவைப்பட்டிருந்தனர்.  எனினும் அது இன்று டெஸ்ட் போட்டிகளுக்கும் மிகவும் தேவைப்படும் ஒரு விடயம் என்பதனை பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகிய வீரர்கள் உணர்த்தியிருக்கின்றனர்.

இங்கிலாந்து அணியினர், அவர்களது குழாத்தில் பென் ஸ்டோக்ஸ் உள்ளடக்கப்படாததன் காரணமாக தற்போது ஆஷஸ் தொடரினை அவுஸ்திரேலியாவிடம் 3-0 என பறிகொடுத்து இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

சிலர் இவ்வாறு கேள்வி எழுப்ப முடியும். அதாவது, ஸ்டோக் இருந்திருந்தால் என்ன இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்குமா என்று? இந்தக் கேள்விக்கு பதில் தர முன்னால் ஸ்டோக் இல்லாத தற்போதைய இங்கிலாந்து அணி அவர்களது தரப்பினை சமநிலைப்படுத்த மிகவும் போராடுகின்றனர் என்பதை கேள்வி எழுப்புகின்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையில் தற்போது கிரிக்கெட் உலகில் இருக்கும் வீரர்களில் ஸ்டோக் நூறு சதவீதம் ஒரு சிறந்த சகலதுறை வீரர். அதாவது அவரினால் ஒரு முழுநேர துடுப்பாட்ட வீரராகவோ அல்லது ஒரு வேகப்பந்து வீச்சாளராகவோ செயற்பட முடியும்.

பென் ஸ்டோக்ஸ் – Image courtesy – AFP

நியூசிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் நகரில் பிறந்த ஸ்டோக், கனிஷ்ட மட்டத்தில் இருந்தே கிரிக்கெட் போட்டிகளில் சாதிக்க தொடங்கியிருந்தார். அவரின் திறமையினை கண்ட இங்கிலாந்து அணி, 2011 ஆம் ஆண்டில் தமது தரப்புக்காக அவரை விளையாட அழைத்திருந்தது.

இம்முறை ஆஷஸ் தொடரை தன்வசப்படுத்திய அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2017/2018 பருவகாலத்திற்கான ஆஷஸ் கிரிக்கெட்…

ஸ்டோக் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளிலேயே இங்கிலாந்துக்காக முதலில் அறிமுகமாகியிருந்தார். டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்க இங்கிலாந்து அணி இரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டது. அந்த வகையில் 2013/14 ஆம் ஆண்டின் பருவகாலத்தில் இடம்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் ஸ்டோக் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாயிருந்தார். தனது கன்னி டெஸ்ட் போட்டியிலேயே சதம் கடந்த ஸ்டோக் அதனையடுத்து ஒரு நட்சத்திர வீரராக இங்கிலாந்து அணியில் மூன்று வகைப் போட்டிகளிலும் வலம் வரத்தொடங்கினார்.

குறித்த அந்த டெஸ்ட் தொடரினை இங்கிலாந்து 5-0 என பறிகொடுத்து படுதோல்வியடைந்த போதிலும், ஸ்டோக் பற்றி அனைவரும் பேசியிருந்தனர். ஸ்டோக் அத்தொடரில் அதிக ஓட்டங்கள் (279)  குவித்த வீரர்கள் வரிசையில் மூன்றாம் இடத்தினை பெற்றிருந்தோடு, மொத்தமாக 15 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

இதுவரை 39  டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஸ்டோக்ஸ், 35 என்கிற ஓட்ட சராசரியோடு 2,500 ஓட்டங்கள் வரையில் குவித்திருக்கின்றார். அதோடு இவரால் 95 விக்கெட்டுக்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. இதில் சுவராஷ்யமான விடயம் என்னவெனில்  ஸ்டோக் ஐந்து தடவைகள் ஆட்ட நாயகனாக தெரிவாகியிருக்கின்றார். இது அவர் அந்தந்த போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எப்படி முக்கியத்துவம் வாய்ந்த  ஒருவராக அமைந்திருக்கின்றார் என்பதனை விளக்குகின்றது.

ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டிகள் போன்ற இதே மாதிரியான பதிவுகளை ஒரு நாள் மற்றும் T-20 போட்டிகளில் வைத்திருப்பதே அவருக்கு இங்கிலாந்து அணியில் ஒரு நிரந்த இடத்தினைப் பெற்றுத் தந்திருக்கின்றது.

முதல்முறை இலங்கை வரவுள்ள பிபா உலகக் கிண்ண வெற்றிக் கிண்ணம்

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் FIFA உலகக் கிண்ண கால்பந்து… இதன்படி , குறித்த வெற்றிக்…

இலங்கை அணியினை எடுத்துப் பார்க்கும் போது இதே மாதிரியான ஒரு பொறுப்பினை அஞ்செலோ மெதிவ்ஸ் எடுத்திருக்கின்றார். எனினும், தொடர் உபாதைகள் அவர் ஜொலிப்பதில் பல சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கின்றது.

விசேட திறமைகளை தன்னுள் பொதித்து வைத்திருக்கும் மெதிவ்ஸ் இலங்கை அணிக்கு அறிமுகமாக முன்னர், 2006 ஆம் ஆண்டின் 19 வயதின் கீழான வீரர்களுக்கான உலகக் கிண்ணத்தில் இலங்கைத் தரப்பினை தனது 16 ஆவது வயதிலேயே வழிநடாத்தி அசத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அப்போதே மெதிவ்ஸ் மூலம் இலங்கை அணிக்கு சிறந்த எதிர்காலம் ஒன்று உண்டு என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டிருந்தது.

தொடர்ச்சியாக மிகவும் சிறந்த வகையில் செயற்பட்ட மெதிவ்ஸ் TM தில்ஷான், மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோருக்குப் பின்னர் இலங்கை அணியின் நிரந்தர தலைவராகவும் தெரிவாகியிருந்தார். மெதிவ்சின் தலைமையின் கீழான இலங்கை அணி அவரது அபார துடுப்பாட்டம் மூலம் பல போட்டிகளிலும் கடந்த காலங்களில் வெற்றிகளை அடைந்திருந்தது.

மெதிவ்சின் துடுப்பாட்டம் ஒரு புறமிருக்க அவரது பந்து வீச்சு இலங்கை அணிக்கு கிடைத்த வரப்பிரசாதங்களில் ஒன்றாகும் எனக்குறிப்பிட்டாலும் மிகையாகாது. இதனை நடைபெற்று முடிந்த இந்திய அணியுடனான ஒரு நாள் தொடரிலும் அவதானிக்கலாம். துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்படும் மெதிவ்ஸ் வீசும் 5-6 ஓவர்கள் இலங்கை அணியினை பந்துவீச்சுத்துறையில் சமநிலைப்படுத்துவதில் பெரிய பங்கு ஒன்றினை எடுத்துக் கொள்கின்றது.

காயங்கள் மெதிவ்சினை தடுத்திருந்தாலும், இலங்கை அணி தற்போது வைத்திருக்கும் உண்மையான ஒரேயொரு சகலதுறை வீரர் அவர் மாத்திரமே என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

பின்தொடை காயத்தால் மெதிவ்ஸ் மீண்டும் அணியில் இருந்து விலகல்

நேற்று நிறைவடைந்த இந்தியாவுடனான இரண்டாவது T20 போட்டியில் இந்திய இன்னிங்ஸின்…

இப்போதைய நாட்களிலும் தடுமாறிவரும் இலங்கை அணி எந்த வகைப் போட்டிகளிலும் ஒரு சிறந்த சகலதுறை வீரரினை உருவாக்கத் தடுமாறி வருகின்றது. இலங்கை அணி, சனத் ஜயசூரிய போன்ற ஒரு சிறந்த சகலதுறை வீரரை மீண்டும் உருவாக்குவதற்கான ஏலமொன்றில் பல வீரர்களை சோதித்துப்பார்த்துவிட்டது. இதில் எந்த வீரரின் மூலமும் பலன் கிடைக்கவில்லை என்பது உண்மையாகும்.

தற்போது அதிகம் கதைக்கப்படும், இலங்கை அணியின் மட்டுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணியின் தலைவர் திசர பெரேராவில் இருந்து தசுன் சானக்க வரை சகல துறை  வீரர்கள் வந்து சென்ற போதிலும், அவர்களால் அணியில் நீடித்து இடமொன்றினை பெறுவது மிகவும் சிரமமாகவே இருக்கின்றது.

ஒரு வீரர் சிறிய விடயத்தினை செய்வதை பார்த்தாலும் அவர்களுக்கு தேசிய அணியின் தேர்வாளர்கள் வாய்ப்பு தருகின்றனர் போலத்தெரிகின்றது. எனினும், இப்படியாக தேர்வு செய்யப்படும் வீரர்களால் போட்டிகளின் முடிவுகளை வெற்றிகரமாக மாற்ற முடிவதில்லை.

எனவே, இலங்கை அணியில் தேர்வு செய்யப்படும் சகலதுறை வீரர்கள் எதில் பின்தங்குகின்றார்கள் என்பது பார்க்கப்பட்டு அது முதலில் சீர் செய்யப்பட வேண்டும். இதுவே, அவர்களினை போட்டியின் வெற்றியாளர்களாக மாற்ற உதவும்.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க