மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் க்றிஸ் கெயில் 2013ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டித் தொடரின் போது பெங்களூர் ரோயல் செலெஞ்சர்ஸ் அணி சார்பாக பூனே வோரியர்ஸ்
அணிக்கு எதிராக 30 பந்துகளில் சதம் அடித்த சாதனையை இராக் தோமஸ் என்ற மேற்கிந்திய வீரர் 21 பந்துகளில் சதம் அடித்து கெய்லின் 3 வருட சாதனையை முறியடித்துள்ளார்.
பூனே அணியை சுழற்றியடித்தது குஜராத் அணி
டொபாகோ கிரிக்கட் சங்க டி20 போட்டித்தொடரின் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற ஒரு போட்டியில் 23 வயதான தோமஸ் 21 பந்துகளில் சதம் அடித்து இருந்தார். இப்போட்டித் தொடரில் மேசன் ஹால் என்ற அணிக்கு விளையாடி வரும் தோமஸ் ஸ்பேசைட் அணிக்கு எதிரான போட்டியில் எதிரணி நிர்ணயித்த 152 என்ற ஓட்ட இலக்கை வெறுமனே 8 ஓவர்களில் எட்டி மேசன் ஹால் அணி அபார வெற்றி பெற்று இருந்தது. இவ்வெற்றிக்குக் காரணமாக இருந்த இராக் தோமஸ் 21 பந்துகளில் சதம் அடித்து இறுதியாக ஆட்டம் இழக்காமல் 31 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 14 சிக்ஸர்கள் அடங்கலாக 131 ஓட்டங்களைப் பெற்றார். இந்த விலாசுதலின் மூலமே இராக் தோமஸ் டி20 கிரிக்கட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் அடித்து க்றிஸ் கெய்லின் சாதனையை முறியடித்த வீரர் என்ற பெருமையைத் தன் வசப்படுத்தினார்.
மேலும் கிரிக்கட் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்