அவுஸ்திரேலியாவின் பெயார்ஃபெக்ஸ் (Fairfax Media) ஊடக நிறுவனத்துக்கு எதிராக கடந்த வருடம் பதிவுசெய்திருந்த அவதூறு வழக்கின் தீர்ப்பு கிரிஸ் கெயிலுக்கு சாதகமாகியுள்ளதுடன், குறித்த நிறுவனத்தை 3 இலட்சம் அவுஸ்திரேலிய டொலர்களை (3.95 கோடி) நட்ட ஈடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான தொடரிலிருந்து விலகும் கிறிஸ் கெயில்
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயில்…..
கடந்த 2015ம் ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்தியிருந்தன. இந்தப் போட்டித் தொடரின் போது, மேற்கிந்திய தீவுகள் அணியின் உடைமாற்றும் அறைக்கு பெண் ஒருவர் வந்திருந்த போது கிரிஸ் கெயில் அரை நிர்வாணமாக இருந்ததாக குற்றச்சாட்டப்பட்டிருந்தது.
குறித்த விடயம் தொடர்பில் செய்தி வெளியிட்டிருந்த பெயார்ஃபெக்ஸ் ஊடக நிறுவனம், பெண் ஒருவர் தற்செயலாக மேற்கிந்திய தீவுகளின் உடைமாற்றும் அறைக்குச் சென்றிருந்த போது கிரிஸ் கெயில் தன்னுடைய இடுப்பை மறைப்பதற்காக அணிந்திருந்த துடைப்பை (Towel) அகற்றி அரை நிர்வாணமாக தனது அந்தரங்க உறுப்பை காட்டியதாகவும், பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் செய்தி பகிர்ந்திருந்தது.
இந்த செய்தியினை உலகின் அனைத்து ஊடகங்களும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்த, கிரிஸ் கெயில் குறித்த செய்தியில் உண்மை இல்லை எனவும், குறித்த செய்தியை வெளியிட்ட பெயார்ஃபெக்ஸ் ஊடகத்துக்கு எதிராக வழக்கு தொடருவதாகவும் அறிவித்திருந்தார். இதன்படி கடந்த வருடம் அவுஸ்திரேலியாவின் நியூவ் சௌத் வேல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் நான்கு பேர் கொண்ட நீதிபதிகள் குழு விசாரணை நடத்தியதன் படி இன்றைய தினம் வழக்கு விசாரணையின் தீர்ப்பை அறிவித்திருந்தனர். மேற்குறிப்பிட்டவாறு கிரிஸ் கெயில் நடந்துக்கொண்டமைக்கான சரியான ஆதரங்கள் மற்றும் சாட்சிகளை பெயார்ஃபெக்ஸ் நிறுவனம் முன்வைக்க தவறியுள்ளது. இதனால், உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர் ஒருவர் எதிராக, சாட்சியங்கள் இல்லாம் செய்தியினை பகிர்ந்தமைக்காக 3 இலட்சம் அவுஸ்திரேலிய டொலர்களை நட்ட ஈடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
கிறிஸ் கெயிலின் அரிய சாதனையுடன் குஜராத் லயன்சை வீழ்த்தியது பெங்களூர்
ஐ.பி.எல் அரங்கில் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற போட்டியில்….
அதுமாத்திரமின்றி, குறித்த குற்றச்சாட்டானது உலகின் முன்னணி கிரிக்கெட் வீரரான கிரிஸ் கெயிலின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பதாக அமைந்துள்ளதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், பெயார்ஃபெக்ஸ் ஊடகம், இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக பகிரங்கமாக அறிவித்துள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<