முதன்முறையாக நடைபெற்ற நிர்மாலி விக்ரமசிங்க சவால் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டியின் சம்பியனாக கேட்வே கல்லூரி மகுடம் சூடியுள்ளது.
வெலிசறை கடற்படை உள்ளக அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கொழும்பு மகளிர் கல்லூரி அணியை 33-14 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி கேட்வே கல்லூரி வெற்றிபெற்றது.
- சமரியின் சகலதுறை ஆட்டத்தால் இலங்கை மகளிருக்கு சரித்திர வெற்றி
- இலங்கை வீரர்களுக்கு சீனாவில் விசேட பயிற்சி முகாம்
ஆட்டத்தின் முதல் காற்பகுதியை 8-6 என்ற சிறிய முன்னிலையுடன் ஆரம்பித்த கேட்வே கல்லூரி இரண்டாவது காற்பகுதியை 9-4 என கைப்பற்றி ஆட்டத்தின் முதல் பாதியில் 17-10 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
மீண்டும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய கேட்வே கல்லூரி அணி 11 புள்ளிகளை பெற்றுக்கொண்டதுடன், 4 புள்ளிகளை மாத்திரமே மகளிர் கல்லூரி அணிக்கு விட்டுக்கொடுத்தது. எனவே மூன்றாவது காற்பகுதி நிறைவில் 28-14 என முன்னிலையடைந்து தொடர்ந்து நடைபெற்ற இறுதி காற்பகுதியில் எந்த புள்ளிகளையும் எதிரணிக்கு வழங்காத கேட்வே கல்லூரி அணி 33-14 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை தனதாக்கியது.
விருதுகள்
- சிறந்த ஷூட்டர் – ஓனதி சமரகோன் (கேட்வே)
- சிறந்த தடுப்பு வீராங்கனை – மெதுலி எரஹபொல (கேட்வே)
- சிறந்த மத்தியக்கள வீராங்கனை – ஆதிரை இலங்கோவன் (மகளிர்)
அதேநேரம் கண்டி கேட்வே கல்லூரி மற்றும் அனுலா வித்தியாலயத்துக்கு இடையில் நடைபெற்ற கண்காட்சிப் போட்டியில் கேட்வே கல்லூரி 14-12 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
விருதுகள்
- சிறந்த ஷூட்டர் – சனுல்யா ராஜபக்ஷ (கேட்வே கண்டி)
- சிறந்த தடுப்பு வீராங்கனை – தாரகா செனரத் (அனுலா)
- சிறந்த மத்தியக்கள வீராங்கனை – கிஹன்ஷா நாகந்தலாகே (கேட்வே கண்டி)