இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளாரக கௌதம் கம்பீர்

153

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயற்பட்டு வந்த ராகுல் ட்ராவிட்டின் பதவிக்காலம் T20 உலகக் கிண்ணத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதனை அடுத்து நிறைவடைந்திருந்தது.

>>புற்றுநோய் விழிப்புணர்வுக்காக புதிய ஜேர்சியுடன் தம்புள்ள சிக்ஸர்ஸ்

இந்த நிலையில் இந்திய அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளராக யார் நியமனம் செய்யப்படுவார் என்கிற கேள்வி எழுந்து வந்திருந்த நிலையில், கௌதம் கம்பீரை இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமனம் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதோடு இந்திய அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக செயற்பட்டு வந்த விக்ரம் ரத்தோர், பந்துவீச்சுப் பயிற்சியாளராக செயற்பட்ட பராஸ் ஹாம்ப்ரேய் மற்றும் களத்தடுப்பு பயிற்சியாளராக செயற்பட்ட டி. திலீப் ஆகியோரது பதவிக்காலமும் நிறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கௌதம் கம்பீர் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்ட விடயத்தினை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) செயலாளரான ஜெய் சாஹ் தன்னுடைய X கணக்கு வாயிலாக உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

இதேநேரம் கௌதம் கம்பீரின் பதவிக்காலம் 2027ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் வரை செல்லுபடியாகும் எனக் கூறப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை கௌதம் கம்பீர் இந்திய அணியுடன் இணைந்து பணியாற்றவுள்ள முதல் கிரிக்கெட் தொடராக இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் அமைகின்றது. குறிப்பிட்ட சுற்றுப்பயணத்தில் தலா மூன்று போட்டிகள் வீதம் கொண்ட ஒருநாள் மற்றும் T20 தொடர்கள் இலங்கை – இந்திய அணிகள் இடையில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<