புற்றுநோய் விழிப்புணர்வுக்காக தம்புள்ள அணியுடன் கைகோர்க்கும் கோல் மார்வல்ஸ்

Lanka Premier League 2024

122

LPL தொடரில் தம்புள்ள சிக்ஸர்ஸ் அணியின் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு போட்டிக்கு கோல் மார்வல்ஸ் அணியும் தங்களுடைய ஆதரவை வழங்க முன்வந்துள்ளது. 

கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் 14ம் திகதி நடைபெறவுள்ள கோல் மார்வல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தம்புள்ள சிக்ஸர்ஸ் அணி இளஞ்சிவப்பு நிற ஜேர்சியுடன் களமிறங்கவுள்ளதாக அறிவித்திருந்தது. 

புற்றுநோய் விழிப்புணர்வுக்காக புதிய ஜேர்சியுடன் தம்புள்ள சிக்ஸர்ஸ்

குறிப்பாக இலங்கையில் அதிகரித்துவரும் மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனை வரும் முன் காப்பதற்கான எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தம்புள்ள சிக்ஸர்ஸ் அணியின் வீரர்கள் இளஞ்சிவப்பு நிறத்திலான ஜேர்சி மற்றும் மார்பக புற்றுநோய்க்கான பட்டி என்பவற்றை அணிந்து விளையாடவுள்ளதாக அறிவித்தனர். 

இந்தநிலையில் கோல் மார்வல்ஸ் அணியும் தங்களுடைய ஜேர்சியில் இளஞ்சிவப்பு நிறத்தை சேர்ததுக்கொண்டு தம்புள்ள சிக்ஸர்ஸ் அணிக்கு ஆதரவு வழங்குவதுடன், மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. 

அதுமாத்திரமின்றி கோல் மார்வல்ஸ் அணி குறிப்பிட்ட இந்தப் போட்டிக்கு 100 வறிய குழந்தைகளை அழைத்துவரவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. 

இதேவேளை இரண்டு அணிகளுடைய இந்த செயற்பாட்டிற்கு இலங்கை கிரிக்கெட் சபை அவர்களுடைய பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதுடன், ஜூலை 14ம் திகதியை “Pink Day” ஆக (இளஞ்சிவப்பு தினம்) மாற்றுவதற்கான விசேட ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<