Home Tamil ஷமியுல்லா சின்வாரியின் அதிரடியோடு தம்புள்ள வைகிங் வெற்றி

ஷமியுல்லா சின்வாரியின் அதிரடியோடு தம்புள்ள வைகிங் வெற்றி

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

201
SLC

லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் 17ஆவது போட்டியில், தம்புள்ள வைகிங் அணி கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. 

தம்புள்ள வைகிங் மற்றும் கோல் கிளேடியேட்டஸ் அணிகள் இடையிலான போட்டி புதன்கிழமை (9) ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தம்புள்ள வைகிங் அணியின் தலைவர் தசுன் ஷானக்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு வழங்கினார். 

ஸ்டெய்னின் வருகையுடன் ஸ்டாலியன்ஸை வீழ்த்திய கண்டி டஸ்கர்ஸ்

இப்போட்டிக்கான தம்புள்ள வைகிங் அணி ஏற்கனவே லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகிய காரணத்தினால் பரீட்சார்த்த நோக்கில் அயர்லாந்து துடுப்பாட்ட வீரர் போல் ஸ்டெர்லிங்கினை உள்வாங்கியிருந்தது. மறுமுனையில் தமது கடைசி மோதலில் கொழும்பு கிங்ஸ் வீரர்களை வீழ்த்திய கோல் க்ளேடியேட்டர்ஸ் மாற்றங்கள் ஏதுமின்றி களமிறங்கியது. 

தம்புள்ள வைகிங் – நிரோஷன் டிக்வெல்ல (WK), உபுல் தரங்க, அஞ்செலோ பெரேரா, போல் ஸ்டெர்லிங், சமித் பட்டேல், தசுன் ஷானக (C), சமியுல்லா ஷின்வாரி, ரமேஷ் மெண்டிஸ், கசுன் ராஜித, சுதீப் தியாகி, டில்ஷான் மதுசங்க

கோல் கிளேடியேட்டர்ஸ் – தனுஷ்க குணதிலக்க, டேனியல் பெல்-ட்ரெமொண்ட், பானுக ராஜபக்ஷ (C), தனன்ஜய லக்ஷான், அசாம் கான் (WK), அஹ்சன் அலி, சட்விக் வால்டன், செஹான் ஜயசூரிய, லக்ஷான் சந்தகன், மொஹமட் ஆமிர், செஹான் ஆராச்சிகே, நுவன் துஷார

பின்னர் போட்டியின் நாணய சுழற்சிக்கு அமைவாக முதலில் துடுப்பாடிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணி அதிரடி ஆரம்பத்தினைப் பெற்ற போதும் போட்டியின் நான்காவது ஓவரில் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அஹ்சன் அலி வெறும் ஒரு ஓட்டத்தினைப் பெற்று டில்ஷான் மதுசங்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எனினும், அணித்தலைவர் பானுக்க ராஜபக்ஷ மற்றும் ஏனைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் ஓட்டங்களை வேகமாக உயர்த்தினர்.

பின்னர், இந்த இரண்டு வீரர்களினதும் விக்கெட்டுக்கள் பறிபோக கோல் கிளேடியேட்டர்ஸ் அணி  தடுமாற்றத்தினைச் சந்தித்தது. இந்த வீரர்களில் தனுஷ்க குணதிலக்க 31 பந்துகளில் 46 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க பானுக்க ராஜபக்ஷ 18 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 31 ஓட்டங்களை எடுத்திருந்தார்.  

ஸ்டெய்னின் வருகையுடன் ஸ்டாலியன்ஸை வீழ்த்திய கண்டி டஸ்கர்ஸ்

இந்த வீரர்களை அடுத்து சரிவிலிருந்த கோல் கிளேடியேட்டர்ஸ் அணியினை தனது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் செஹான் ஜயசூரிய மீட்டார். செஹான் ஜயசூரியவின் துடுப்பாட்ட உதவியோடு கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து 168 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் செஹான் ஜயசூரிய 27 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 39 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.  

மறுமுனையில் தம்புள்ள வைகிங் அணியின் பந்துவீச்சு சார்பில் அணித்தலைவர் தசுன் ஷானக்க, கசுன் ராஜித மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர். 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 169 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய தம்புள்ள வைகிங் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களுடன் அடைந்தது.  

தம்புள்ள வைகிங் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிரடியான முறையில் செயற்பட்டு இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷமியுல்லா சின்வாரி 20 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 46 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். மறுமுனையில், அஞ்செலோ பெரேரா 31 பந்துகளில் 45 ஓட்டங்களையும் நிரோஷன் டிக்வெல்ல 30 பந்துகளுக்கு 38 ஓட்டங்களையும் எடுத்திருந்தனர். 

கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சில் தனஞ்சய லக்ஷான் 2 விக்கெட்டுக்களையும், மொஹமட் ஆமீர் மற்றும் செஹான் ஜயசூரிய ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்தனர். 

போட்டியின் ஆட்டநாயகன் விருது தம்புள்ள வைகிங் அணிக்காக அதிரடி துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய ஷமியுல்லா சின்வாரிக்கு வழங்கப்பட்டது.

2021 ஜனவரி ஆரம்பத்தில் ஹம்பாந்தோட்டை வரும் இங்கிலாந்து அணி

இப்போட்டியில் தோல்வியடைந்திருக்கும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி தமது அரையிறுதிப் போட்டி வாய்ப்பினை தக்கவைக்க, தமது அடுத்த போட்டியில் வியாழக்கிழமை (9) கண்டி டஸ்கர்ஸ் அணியுடன் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்த நிலையில் காணப்படுகின்றது. இதேநேரம், தம்புள்ள வைகிங் அணி இவ்வெற்றியுடன் லங்கா ப்ரீமியர் லீக்  தொடர் புள்ளி அட்டவணையில் 5 வெற்றிகளுடன் முதலிடம் பெற்று தமது அடுத்த மோதலில் கொழும்பு கிங்ஸ் அணியினை வெள்ளிக்கிழமை (10) சந்திக்கின்றது. 

போட்டியின் சுருக்கம்

Result


Galle Gladiators
168/8 (20)

Dambulla Aura
174/6 (20)

Batsmen R B 4s 6s SR
Danushka Gunathilaka c Niroshan Dickwella b Dasun Shanaka 46 31 8 0 148.39
Ahsan Ali lbw b Dilshan Madusanka 5 3 1 0 166.67
Bhanuka Rajapakse c Dasun Shanaka b Ramesh Mendis 31 18 2 3 172.22
Azam Khan lbw b Ramesh Mendis 0 1 0 0 0.00
Chadwick Walton retired 7 9 0 0 77.78
Shehan Jayasuriya c Samiullah Shinwari b Kasun Rajitha 39 27 4 1 144.44
Sahan Arachchige c Upul Tharanga b Kasun Rajitha 9 10 1 0 90.00
Dhananjaya Lakshan not out 23 18 1 1 127.78
Mohammad Amir b Dasun Shanaka 0 3 0 0 0.00
Lakshan Sandakan not out 0 1 0 0 0.00


Extras 8 (b 0 , lb 1 , nb 1, w 6, pen 0)
Total 168/8 (20 Overs, RR: 8.4)
Did not bat Nuwan Thushara,

Fall of Wickets 1-33 (2.3) Ahsan Ali, 2-83 (7.2) Bhanuka Rajapakse, 3-83 (7.3) Azam Khan, 4-90 (9.3) Danushka Gunathilaka, 5-104 (11.3) Chadwick Walton, 6-122 (14.3) Sahan Arachchige, 7-148 (17.2) Shehan Jayasuriya, 8-156 (18.5) Mohammad Amir,

Bowling O M R W Econ
Sudeep Tyagi 1 0 12 0 12.00
Kasun Rajitha 4 0 31 2 7.75
Dilshan Madusanka 2 0 24 1 12.00
Ramesh Mendis 4 0 28 2 7.00
Dasun Shanaka 4 0 38 2 9.50
Samit Patel 3 0 18 0 6.00
Paul Stirling 2 0 16 0 8.00


Batsmen R B 4s 6s SR
Paul Stirling b Mohammad Amir 0 1 0 0 0.00
Niroshan Dickwella c Lakshan Sandakan b Dhananjaya Lakshan 38 30 4 1 126.67
Upul Tharanga lbw b Shehan Jayasuriya 9 11 1 0 81.82
Angelo Perera lbw b Lakshan Sandakan 45 31 4 1 145.16
Dasun Shanaka c Sahan Arachchige b Dhananjaya Lakshan 9 12 0 0 75.00
Samit Patel run out (Dhananjaya Lakshan) 11 8 1 0 137.50
Samiullah Shinwari not out 46 20 6 2 230.00
Ramesh Mendis not out 13 7 1 1 185.71


Extras 3 (b 0 , lb 0 , nb 0, w 3, pen 0)
Total 174/6 (20 Overs, RR: 8.7)
Did not bat Kasun Rajitha, Dilshan Madusanka, Sudeep Tyagi,

Fall of Wickets 1-0 (0.1) Paul Stirling, 2-23 (3.3) Upul Tharanga, 3-76 (10.2) Niroshan Dickwella, 4-100 (13.4) Angelo Perera, 5-104 (14.3) Dasun Shanaka, 6-128 (16.4) Samit Patel,

Bowling O M R W Econ
Mohammad Amir 4 0 29 1 7.25
Nuwan Thushara 4 0 46 0 11.50
Shehan Jayasuriya 3 0 26 1 8.67
Danushka Gunathilaka 1 0 6 0 6.00
Lakshan Sandakan 4 0 34 1 8.50
Dhananjaya Lakshan 4 0 33 2 8.25



முடிவு – தம்புள்ள வைகிங் 4 விக்கெட்டுக்களால் வெற்றி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<