லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணியினை 2 விக்கெட்டுக்களால் வீழ்த்திய கோல் கிளேடியேட்டர்ஸ் அணி தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் முதல் அணியாக மாறியிருக்கின்றது.
லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி, தொடரின் புள்ளிகள் அட்டவணையில் முதலிடம் பெற்ற கொழும்பு கிங்ஸ் அணிக்கும் புள்ளிகள் அட்டவணையில் நான்காம் இடத்தினைப் பெற்ற கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கும் இடையில் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்றிருந்தது.
இலங்கை – தென்னாபிரிக்கா தொடர் நடைபெறுவது உறுதி
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் தலைவர் பானுக்க ராஜபக்ஷ முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தார்.
இப்போட்டிக்கான கோல் கிளேடியேட்டர்ஸ் அணி ஒரு மாற்றத்தினை மேற்கொண்டிருந்தது. அந்தவகையில், ஹஸ்ரத்துல்லா சஷாயிற்குப் பதிலாக கோல் கிளேடியேட்டர்ஸ் அணியில் துடுப்பாட்ட சகலதுறை வீரரான சானக்க ருவன்சிறி உள்வாங்கப்பட்டிருந்தார். மறுமுனையில், கொழும்பு கிங்ஸ் அணி லோரி எவான்ஸிற்குப் பதிலாக அமில அபொன்சோவினை உள்வாங்கியிருந்தது.
கோல் கிளேடியேட்டர்ஸ் – தனுஷ்க குணதிலக்க, சானக்க ருவன்சிறி, பானுக ராஜபக்ஷ (C), தனன்ஜய லக்ஷான், அசாம் கான் (WK), அஹ்சன் அலி, செஹான் ஜயசூரிய, லக்ஷான் சந்தகன், மொஹமட் ஆமிர், செஹான் ஆராச்சிகே, நுவன் துஷார
கொழும்பு கிங்ஸ் – தினேஷ் சந்திமால் (WK), அசான் ப்ரியன்ஜன், திக்ஷில டி சில்வா, அஞ்செலோ மெதிவ்ஸ் (C), கைஸ் அஹமட், துஸ்மந்த சமீர, தரிந்து கௌஷால், ஹிமேஷ் ரத்னாயக்க, டேனியல் பெல்-ட்ரம்மன்ட், அமில அபொன்சோ
தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சிக்கு அமைவாக முதலில் துடுப்பாடிய கொழும்பு கிங்ஸ் அணிக்கு சிறந்த ஆரம்பம் ஒன்று கிடைக்கவில்லை. அணியின் ஆரம்ப வீரர்களாக வந்த தினேஷ் சந்திமால் மற்றும் லஹிரு உதார ஆகியோர் மோசமான ஆட்டத்துடன் வெளியேறினர். அதேநேரம், எதிர்பார்க்கப்பட்ட அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், அன்ட்ரே ரசல் ஆகியோரும் ஏமாற்றினர். எனினும், டேனியல் பெல்-ட்ரம்மன்ட் பொறுப்பான முறையில் ஓட்டங்களைச் சேர்த்தார்.
தொடர்ந்து டேனியல் பெல்-ட்ரம்மன்டின் துடுப்பாட்ட உதவியோடு கொழும்பு கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
நவீன விளையாட்டு (Digital) ஊடகத்துக்கான விருதை வென்ற Thepapare.com
கொழும்பு கிங்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக இந்த லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் தன்னுடைய முதல் அரைச்சதத்தினைப் பதிவு செய்த டேனியல் பெல்-ட்ரம்மன்ட் 53 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 70 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
இதேநேரம், கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் லக்ஷான் சந்தகன் 3 விக்கெட்டுக்களையும் தனன்ஜய லக்ஷான் மற்றும் நுவான் துஷார ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்திருந்தனர்.
பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 151 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களுடன் த்ரில்லரான முறையில் அடைந்தது.
விறுவிறுப்பாக அமைந்த கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில், பானுக்க ராஜபக்ஷ 17 பந்துகளுக்கு 33 ஓட்டங்களை எடுத்திருந்தார். இதேநேரம், தனன்ஜய லக்ஷான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 23 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 31 ஓட்டங்களுடன் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்.
கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிக்கு இறுதி ஓவரில் 15 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் தனன்ஜய லக்ஷான் மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் சிறந்த முறையில் ஆடி வெற்றி இலக்கை அடைந்தனர்.
கொழும்பு கிங்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பாக அஷான் பிரியஞ்சன் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்தும் அது வீணாகியிருந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்காக சகலதுறைகளிலும் அசத்திய தனன்ஜய லக்ஷான் தெரிவாகினார்.
அதேநேரம், லங்கா ப்ரீமியர் தொடரின் அடுத்த அரையிறுதிப் போட்டியில் திங்கட்கிழமை (1) தம்புள்ள வைகிங், ஜப்னா ஸ்டாலியன்ஸ் வீரர்களை எதிர்கொள்கின்றது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Lahiru Udara | c Ahsan Ali b Nuwan Thushara | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Dinesh Chandimal | Ahsan Ali b Dhananjaya Lakshan | 14 | 10 | 3 | 0 | 140.00 |
Daniel Bell Drummond | c Bhanuka Rajapakse b Shehan Jayasuriya | 70 | 53 | 7 | 3 | 132.08 |
Angelo Mathews | c Shehan Jayasuriya b Lakshan Sandakan | 6 | 11 | 0 | 0 | 54.55 |
Andre Russell | c Azam Khan b Lakshan Sandakan | 11 | 6 | 1 | 1 | 183.33 |
Ashan Priyanjan | c Bhanuka Rajapakse b Lakshan Sandakan | 5 | 6 | 0 | 0 | 83.33 |
Thikshila de silva | c Chanaka Ruwansiri b Dhananjaya Lakshan | 6 | 8 | 0 | 0 | 75.00 |
Qais Ahmed | c Mohammad Amir b Nuwan Thushara | 8 | 4 | 0 | 1 | 200.00 |
Isuru Udana | c Shehan Jayasuriya b Sahan Arachchige | 19 | 11 | 1 | 1 | 172.73 |
Dushmantha Chameera | not out | 5 | 6 | 0 | 0 | 83.33 |
Extras | 5 (b 0 , lb 1 , nb 0, w 4, pen 0) |
Total | 150/9 (20 Overs, RR: 7.5) |
Did not bat | Amila Aponso, |
Fall of Wickets | 1-3 (1.1) Lahiru Udara, 2-32 (5.3) Dinesh Chandimal, 3-57 (9.4) Angelo Mathews, 4-75 (11.3) Andre Russell, 5-99 (13.6) Ashan Priyanjan, 6-112 (15.4) Daniel Bell Drummond, 7-123 (16.3) Qais Ahmed, 8-126 (17.2) Thikshila de silva, 9-150 (19.6) Isuru Udana, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mohammad Amir | 4 | 0 | 26 | 0 | 6.50 | |
Nuwan Thushara | 4 | 0 | 27 | 2 | 6.75 | |
Dhananjaya Lakshan | 4 | 0 | 27 | 2 | 6.75 | |
Lakshan Sandakan | 4 | 0 | 32 | 3 | 8.00 | |
Sahan Arachchige | 3 | 0 | 21 | 1 | 7.00 | |
Shehan Jayasuriya | 1 | 0 | 16 | 1 | 16.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Ahsan Ali | b Angelo Mathews | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Danushka Gunathilaka | c Qais Ahmed b Ashan Priyanjan | 13 | 8 | 3 | 0 | 162.50 |
Bhanuka Rajapakse | st Dinesh Chandimal b Ashan Priyanjan | 33 | 18 | 3 | 2 | 183.33 |
Azam Khan | c Isuru Udana b Dushmantha Chameera | 21 | 13 | 3 | 1 | 161.54 |
Sahan Arachchige | run out (Angelo Mathews) | 3 | 6 | 0 | 0 | 50.00 |
Shehan Jayasuriya | run out (Tharindu Kaushal) | 22 | 24 | 1 | 0 | 91.67 |
Chanaka Ruwansiri | c Lahiru Udara b Qais Ahmed | 9 | 14 | 0 | 0 | 64.29 |
Dhananjaya Lakshan | not out | 31 | 23 | 2 | 1 | 134.78 |
Mohammad Amir | c Ashan Priyanjan b Thikshila de silva | 8 | 8 | 0 | 1 | 100.00 |
Lakshan Sandakan | not out | 4 | 1 | 1 | 0 | 400.00 |
Extras | 7 (b 0 , lb 1 , nb 0, w 6, pen 0) |
Total | 151/8 (19.5 Overs, RR: 7.61) |
Did not bat | Nuwan Thushara, |
Fall of Wickets | 1-13 (1.5) Danushka Gunathilaka, 2-17 (2.2) Ahsan Ali, 3-57 (5.6) Azam Khan, 4-75 (8.2) Bhanuka Rajapakse, 5-75 (8.3) Sahan Arachchige, 6-98 (12.6) Chanaka Ruwansiri, 7-116 (15.6) Shehan Jayasuriya, 8-136 (18.6) Mohammad Amir, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Angelo Mathews | 3.1 | 0 | 17 | 1 | 5.48 | |
Ashan Priyanjan | 4 | 0 | 42 | 1 | 10.50 | |
Isuru Udana | 3.5 | 0 | 26 | 0 | 7.43 | |
Dushmantha Chameera | 3.5 | 0 | 36 | 1 | 10.29 | |
Qais Ahmed | 4 | 0 | 27 | 1 | 6.75 | |
Thikshila de silva | 1 | 0 | 2 | 1 | 2.00 |
முடிவு – கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<