இலங்கை தொடருக்கு பின்னர் அணிக்கு திரும்பும் ஷனொன் கேப்ரியல்

West Indies tour of Zimbabwe 2023

252

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் குழாத்தில் முழங்கால் உபாதைக்கு முகங்கொடுத்துள்ள ஜெய்டன் சீல்ஸிற்கு பதிலாக அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ஷனொன் கேப்ரியல் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் இலங்கை அணியில் குசல் ஜனித், துஷ்மந்த

ஷனொன் கேப்ரியல் இறுதியாக 2021ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடியிருந்தார். தற்போது உள்ளூர் போட்டிகளில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தி மீண்டும் அணியில் வாய்ப்பை தக்கவைத்துள்ளார்.

ஷனொன் கேப்ரியல் அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு இடதுகை சுழல் பந்துவீச்சாளர்களும் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர். குடகேஷ் மொடீ மற்றும் ஜோமல் வரிகன் ஆகியோரே இவ்வாறு அணியில் இடம்பெற்றுள்ளனர். ஜோமல் வரிகனும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இறுதியாக விளையாடியிருந்ததுடன், குடகேஷ் மொடீ கடந்த ஆண்டு நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் டெஸ்ட் அறிமுகத்தை பெற்றிருந்தார்.

ஜெய்டன் சீல்ஸ் மாத்திரமின்றி அண்டர்சன் பிலிப்ஸ் உபாதை காரணமாக தொடரை தவறவிட்டுள்ளதுடன், ஷெமார் புரூக்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியின் தலைவராக கிரைக் பிராத்வைட் தொடர்ந்தும் செயற்படவுள்ளதுடன், ஜெர்மைன் பிளக்வூட் உப தலைவராக செயற்படவுள்ளார். இவர்களுடன் கெமார் ரோச், ஜேசன் ஹோல்டர், ரொஸ்டன் சேஸ், அல்ஷாரி ஜோசப் மற்றும் கெயல் மேயர்ஸ் போன்ற முன்னணி வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் அணி ஜிம்பாப்வேயிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடர் பெப்ரவரி 4ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் குழாம்

கிரைக் பிராத்வைட் (தலைவர்), ஜெர்மைன் பிளக்வூட், குருமா போனர், டெக்நரைன் சந்தரபோல், ரொஸ்டன் சேஸ், ஜொசுவா டி சில்வா, ஷனொன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்ஷாரி ஜோசப், கெயல் மேயர்ஸ், குடகேஷ் மொடீ, ரெய்மன் ரீபர், கெமார் ரோச், டெவோன் தோமஸ், ஜொமல் வரிகன்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<