இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 8ம் திகதி ஆரம்பிக்கவுள்ள SLC அழைப்பு T20 தொடரை ரசிகர்கள் கட்டணமின்றி இலவசமாக பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
SLC அழைப்பு T20 தொடர் இம்மாதம் 8ம் திகதி முதல் 15ம் திகதிவரை கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டித்தொடரில் இலங்கையின் முன்னணி வீரர்கள் விளையாடவுள்ளனர்.
ஹன்ட்ரட் தொடரில் விளையாடும் வாய்ப்பினை இழக்கும் வனிந்து ஹஸரங்க
இந்தநிலையில் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டிகள் அனைத்தையும் ரசிகர்கள் நேரடியாக சென்று பார்வையிட முடியும் என்பதுடன், நுழைவுக்கட்டணம் அறவிடப்படாது என இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
போட்டித் தொடரில் SLC ரெட்ஸ், SLC கிரீன்ஸ், SLC கிரேய்ஸ் மற்றும் SLC புளூஸ் ஆகிய நான்கு அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டித்தொடரானது அடுத்து நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணம் மற்றும் ஆசியக் கிண்ணத் தொடர்களுக்கான தயார்படுத்தல்களுக்காக நடத்தப்படவுள்ளது.
ஒவ்வொரு அணிகளும் முதல் சுற்றில் 3 போட்டிகளில் விளையாடவுள்ளதுடன், இதில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இறுதிப்போட்டி எதிர்வரும் 15ம் திகதி நடைபெறவுள்ளதுடன், அனைத்து போட்டிகளும் ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<