யாழ்ப்பாணம் கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் பிரான்ஸ் தமிழர் கால்பந்தாட்ட சம்மேளனமானது வடமாகாண ரீதியாக அழைக்கப்பட்ட அணிகளுக்கிடையே கால்பந்தாட்டத் தொடரை நடாத்தி வருகின்றது. யாழ்ப்பாணம் துரையாப்பா விளையாட்டு மைதானம் மற்றும் அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானம் ஆகிய இரு மைதானங்களிலும் 24 அணிகளை உள்ளடக்கியதாக இப்போட்டித்தொடர் நேற்று (30) ஆரம்பமாகியது. நேற்று அனைத்து லீக் சுற்றுகளும் நடைபெற்று முடிவடைந்த நிலையில், இன்று (01) விலகல் சுற்றும் இடம்பெறவுள்ளது.
முதலாவது சுற்றிற்காக 24 அணிகளும், குழுவிற்கு 3 அணிகள் வீதம் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் மோதியிருந்தன.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு
குழு A
- குருநகர் பாடும்மீன் 3 – 0 கிளிநொச்சி லக்கிஸ்டார்
- புங்குடுதீவு நசரத் 1 – 1 குருநகர் பாடும்மீன்
- கிளிநொச்சி லக்கிஸ்டார் 0 – 0 புங்குடுதீவு நசரத்
குழு B
- இளவாலை யங்ஹென்றீஸ் 0 – 0 மயிலங்காடு ஞானமுருகன்
- மயிலங்காடு ஞானமுருகன் 3 – 0 மன்னார் டிலசால
- மன்னார் டிலசால 0 – 0 இளவாலை யங்ஹென்றீஸ்
குழு C
- விடத்தல்தீவு யூனியன் 0 – 2 துறையூர் ஐயனார்
- துறையூர் ஐயனார் 1 – 0 கம்பர்மலை யங்கம்பன்ஸ்
- கம்பர்மலை யங்கம்பன்ஸ் 3 – 0 விடத்தல்தீவு யூனியன்
குழு D
- கிளிநொச்சி யுனைட்டட் 2 – 0 மன்னார் கில்லறி
- மன்னார் கில்லறி 2 – 0 ஆனைக்கோட்டை யூனியன்
- ஆனைக்கோட்டை யூனியன் 0 – 0 கிளிநொச்சி யுனைட்டட்
அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானம்
குழு E
- பாசையூர் சென். அன்ரனிஸ் 3 – 0 அல்வாய் நண்பர்கள்
- அல்வாய் நண்பர்கள் 0 – 4 நவிண்டில் கலைமதி
- நவிண்டில் கலைமதி 0 – 0 பாசையூர் சென். அன்ரனில்
குழு F
- மன்னார் சென் லூசியா – வலைப்பாடு ஜெகாமீட்பர் (வோக் ஓவர் முறையில் சென் லூசியா வெற்றி)
- வலைப்பாடு ஜெகாமீட்பர் 2 – 0 அராலி அண்ணா
- அராலி அண்ணா 3 – 0 மன்னார் சென் லூசியா
ரினௌன் – ஜாவா லேன் மோதல் சமநிலை : கொழும்பு அணிக்கு அதிர்ச்சி கொடுத்த சுபர் சன்
குழு G
- மெலிஞ்சிமுனை இருதயராஜா 0 – 1 நாவாந்துறை சென். நீக்கிலஸ்
- நாவாந்துறை சென். நீக்கிலஸ் 3 – 0 குப்பிளான் குறிஞ்சிக்குமரன்
- குப்பிளான் குறிஞ்சிகுமரன் 0 – 1 மெலிஞ்சிமுனை இருதஜராஜா
குழு H
- ஜோசப்வாஸ்நகர் ஜக்கியம் 0 – 0 வதிரி டைமன்ட்ஸ்
- வதிரி டைமன்ட்ஸ் 3 – 1 பொலிகை பாரதி
- பொலிகை பாரதி 0 – 0 ஜோசப்வாஸ் நகர் ஐக்கியம்
குழு நிலைப்போட்டிகளின் நிறைவாக தத்தமது குழுக்களில் முதலிரு இடங்களைப் பெற்றுக்கொண்ட பின்வரும் அணிகள் விலகல் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
- A – 1. குருநகர் பாடும்மீன் 2. புங்குடுதீவு நசரத்
- B – 1. மயிலங்காடு ஞானமுருகன் 2. இளவாலை யங்ஹென்றீஸ்
- C – 1. துறையூர் ஜயனார் 2. கம்பர்மலை யங்கம்பன்ஸ்
- D – 1. மன்னார் ஹில்லறி 2. கிளிநொச்சி யுனைட்டட்
- E – 1. நவிண்டில் கலைமதி 2. பாசையூர் சென். அன்ரனிஸ்
- F – 1. மன்னார் சென். லூசியா 2. வலைப்பாடு ஜெகாமீட்பர்
- G – 1. நாவாந்துறை சென் நீக்கிலஸ் 2. துறையூர் ஐயனார்
- H – 1. வதிரி டைமன்ட்ஸ் 2. ஜோசப்வாஸ் நகர் ஜக்கியம்
இன்றைய தினம் அரையிறுதிப் போட்டிகள் மாலை 4 மணியளவில் இரு மைதானங்களிலும் இடம்பெறவிருக்கும் அதேவேளை, மூன்றாமிடத்திற்கான போட்டி இரவு 7 மணியளவிலும் இறுதிப்போட்டி இரவு 8 மணியளவிலும் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.