என்னைப் பார்த்து சாதிக்க கற்றுக் கொள்ளுங்கள் – மாலிங்க 

207

நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரே ஓவரில் அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுக்களைக் கைப்பற்றியது தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஒரு மைல்கல்லாகும் என இலங்கை டி-20 அணியின் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்தார். 

அத்துடன், தனது வாழ்க்கை முழுவதும் பல சவால்களை சந்தித்து இந்த இடத்திற்கு வந்ததாக தெரிவித்த அவர், இளம் வீரர்கள் தன்னைப் பார்த்து சவால்களை எவ்வாறு வெற்றிகொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.  

மாலிங்கவின் சாதனையால் சுருண்டது நியூசிலாந்து

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கு எதிராக கண்டி – பல்லேகலை….

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவதும், இறுதியுமான டி-20 போட்டியில் இலங்கை அணி 37 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பெற்றது.இந்தப் போட்டியில் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க டி-20 வரலாற்றில் புதிய சாதனையை நிலை நாட்டினார்

இந்த நிலையில், போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனது சாதனை குறித்து லசித் மாலிங்க கருத்து தெரிவிக்கையில்

நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரே ஓவரில் அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுக்களைக் கைப்பற்றியது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது. எனினும், மற்றுமொரு போட்டியில் நான் பந்துவீசி ஓட்டங்களைக் கொடுத்தால் அந்த நான்கு விக்கெட்டுக்கள் பற்றி பேசப்பட மாட்டாது. எனவே ஒரு போட்டியில் நிகழ்த்திய எனது ஒரு மைல்கல்லாகவே நான் இதை பார்க்கிறேன்

அதேபோல, நான் விளையாடும் வரை அணிக்காக எனது 100 சதவீத பங்களிப்பினை வழங்குவதே எனது குறிக்கோளாகும். எந்தவொரு வீரருக்கும் எந்நாளும் சிறப்பாக விளையாட முடியாது. ஆனாலும், போட்டி முடியும் வரை விளையாடுவதையே நான் மிகவும் விரும்புவேன். அந்த நேரத்தில் தவறுகளும் நடக்கலாம்

எதுஎவ்வாறாயினும், டி-20 போட்டியில் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கு கிடைத்தமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிப் பகுதியில் விளையாடி வருகிறேன்

Photos: Sri Lanka vs New Zealand | 3rd T20I

ThePapare.com | Viraj Kothalawala | 06/09/2019 Editing….

எனவே என்னுடன் விளையாடிய இளம் வீரர்களுக்கு எனது திறமையை பார்க்க முடிந்தது. அதைப் பார்த்து அவர்களுக்கும் எப்போதாவது இதேபோல சாதிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கும். அதைத்தான் வீரரொருவர் எப்போதும் செய்ய வேண்டும்என தெரிவித்தார்.

இந்தத் தொடரில் விளையாடிய இளம் வீரர்களின் திறமையில் ஏதாவது முன்னேற்றம் காணப்பட்டதா என எழுப்பிய கேள்விக்கு மாலிங்க கருத்து வெளியிடுகையில்,

ஆம். முதலிரண்டு போட்டிகளை எடுத்துக் கொண்டால் நாங்கள் தோல்வியைத் தழுவினோம். ஆனால் போட்டியின் இறுதி ஓவர் வரை நாங்கள் விளையாடிய விதம் பாராட்டத்தக்கது. தற்போது விளையாடிய அணியில் இடம்பெற்ற வீரர்களில் பெரும்பாலானவர்களுக்கு டி-20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் குறைவு

எனவே, அவ்வாறான வீரர்களுடன் உலகின் பல்வேறு டி-20 லீக் போட்டிகளில் விளையாடி வருகின்ற நியூசிலாந்து போன்ற அனுபவமிக்க அணியொன்றுடன் விளையாடியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.  

எனவே, 2020 உலகக் கிண்ணத்துக்கு முன் சிறந்த டி-20 அணியொன்றை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அப்போது இலங்கை அணிக்கு யார் தலைவராக இருந்தாலும் எனக்கு கவலை கிடையாது. திறமையான இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வந்து அவர்களுக்கு டி-20 என்றால் என்ன? டி-20இல் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை சொல்லிக் கொடுப்பதுதான் எனது வேலையாகும். அதைத்தவிர எனக்கு வேறெந்த ஆசையும் இல்லை என்றார்.

‘කවුරු නායකයා වුනත් මට ගැටලුවක් නැහැ’ – ලසිත් මාලිංග

ශ්‍රී ලංකාව හා නවසීලන්තය අතර පැවැත්වුණු තෙවැනි සහ අවසන් විස්සයි….

இலங்கை அணி, ஏற்கனவே 2 போட்டிகளில் தோல்வியைத் தழுவி தொடரை இழந்த நிலையில், இந்தப் போட்டிக்காக எவ்வாறான திட்டங்களை முன்னெடுத்தீர்கள் என மாலிங்கவிடம் கேட்ட போது,

ஒவ்வொரு போட்டியிலும் விளையாடும் போது என்னால் போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் தான் களமிறங்குவேன்.  

ஏனெனில், அணியில் உள்ள மற்ற வீரர்களுடன் ஒப்பிடுகையில் எனக்கு விக்கெட்டுக்களைக் கைப்பற்றுகின்ற மற்றும் ஓட்டங்களைக் கட்டுப்படுத்துவதில் கூடுதல் அனுபவம் உண்டு. அதை எவர் ஏற்றுக்கொண்டாலும், இல்லாவிட்டாலும் பரவாயில்லை. நான் அதை ஏற்றுக் கொள்வேன். எனவே பந்தைக் கையில் எடுத்த முதல் ஓவரிலேயே போட்டியை எனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதுதான் எனது குறிக்கோளாக இருக்கும்

எனவே, இந்தப் போட்டியைப் பொறுத்தமட்டில் முதல் விக்கெட்டினைக் கைப்பற்றிய பிறகு நியூசிலாந்து அணியின் இடதுகை துடுப்பாட்ட வீரர் ஹாமிஸ் ருதர்போர்ட் களமிறங்கினார். அவரை முதல் பந்திலேயே ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என நினைத்தேன். அதற்காக நான் யோக்கர் பந்தை பயன்படுத்தி அவரை ஆட்டமிழக்கச் செய்தேன்

அதன்பிறகு எமக்கு இந்தத் தொடரில் மிகப் பெரிய தலையிடியைக் கொடுத்திருந்த ரொஸ் டெய்லர் மற்றும் கொலின் டி கிரேண்ட்ஹோமின் விக்கெட்டுக்களை குறைந்த ஓட்டங்களுக்கு கைப்பற்ற வேண்டி ஏற்பட்டது. முதலிரண்டு போட்டிகளிலும் இவர்கள் இருவரது விக்கெட்டுக்களையும் எமக்குத் தேவையான நேரத்தில் கைப்பற்ற முடியாமல் போனது. இதனால் எமக்கு தோல்வியை சந்திக்க நேரிட்டிருந்தது

இலங்கை வீரர்களுக்கு மின்னொளியில் அதிக பயிற்சி கொடுங்கள் – மாலிங்க

நியூசிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு T20i போட்டிகளிலும்….

எனவே, இந்தப் போட்டியில் இந்த வீரர்கள் இருவரது விக்கெட்டுக்களையும் கைப்பற்றினால் எமக்கு வெற்றிபெறலாம் என நினைத்தோம். இதனால் 2 யோக்கர் பந்துகளை வீசிய எனக்கு 3ஆவது பந்திலும் யோக்கர் ஒன்றை வீசினால் விக்கெட்டினை எடுக்கலாம் நான் யோசித்தேன். எனவே நான் மீண்டும் யோக்கர் பந்தொன்றை வீசி விக்கெட்டினை எடுத்தேன்

தொடர்ந்து 3 விக்கெட்டுக்களை எடுத்த எனக்கு ஏன் நான்காவது விக்கெட்டினையும் எடுக்க இயலாது என எண்ணினேன். எனவே, எனது எண்ணப்படி அதே வேகத்துடன் நான்காவது விக்கெட்டினையும் கைப்பற்றினேன். நான் எந்தளவு ஓட்டங்களைக் விட்டுக்கொடுத்தாலும் அணிக்குத் தேவை விக்கெட் என்றால் அதற்காக நான் முழு மூச்சுடன் பந்துவீசுவேன்என்றார்

மாலிங்கவைப் பொறுத்தவரை உபாதையின் பின்னர் நீண்ட காலம் அணியில் வாய்ப்பு இல்லாமல் இருந்தவர். எனினும், தொடர்ந்து தான் வெளிப்படுத்திய திறமையின் காரணமாக அணிக்குள் உள்வாங்கப்பட்டார்

எனது வாழ்க்கையில் சவால்கள் நிறைய இருந்தன. சவால்களுக்கு முகங்கொப்பதை நான் மிகவும் விரும்பினேன். எனவே என்னைப் பார்த்து இளம் வீரர்களும் சவால்களை எவ்வாறு வெற்றிகொள்ள வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் தான் எம்மால் போட்டியில் வெற்றிபெற முடியும்என தனது கடந்த கால அனுபவம் குறித்து தெரிவித்தார்..

இலங்கை அணியின் களத்தடுப்பு குறித்து மாலிங்க பேசுகையில், இளம் வீரர்களைக் கொண்ட அணியுடன் விளையாடும் போது ஒரு போட்டியில் வெற்றிபெறுவதும் மிகவும் பெறுமதியாகும். ஏனெனில், வெற்றிக்காக நாங்கள் முயற்சித்தால் தான் அதற்கான மனநிலை எப்போதும் எமக்கு இருக்கும்

இளையோர் ஆசியக் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை

இந்தப் பருவகாலத்திற்கான இளையோர் ஆசியக் கிண்ண….

எனவே, இந்த வெற்றி குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வெற்றி பெற்றால் இளம் வீரர்கள் எவ்வாறு அந்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்கின்றார்கள் என்பதையும், ரசிகர்கள் அதற்கு எவ்வாறான உற்சாகத்தைக் கொடுக்கின்றார்கள் என்பதை நான் நன்கு அறிவேன்

உலகக் கிண்ணத்திற்கான தயார்படுத்தல் குறித்து குறிப்பிட்டும்பொழுது, டி-20 உலகக் கிண்ணத்துக்கு முன் எமக்கு 17 போட்டிகள் உள்ளன. அந்தக் காலப்பகுதியில் அவர்களுக்கு நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். அதனால், இந்த வெற்றியானது என்னைப் பொறுத்தமட்டில் பெறுமதி வாய்ந்ததாக உள்ளது”  

இதுஇவ்வாறிருக்க, அணியில் உள்ள வீரர்கள் மாலிங்கவிடம் வந்து அறிவுரைகளைப் பெற்றுக்கொள்கின்றார்களா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மாலிங்க பதிலளிக்கையில்,

அதற்கு என்னால் சரியான பதிலொன்றைக் கொடுக்க முடியாது. அதுதொடர்பில் தற்போது எந்தவொரு கருத்தையும் என்னால் சொல்ல முடியாது. நான் தற்போது அணியில் உள்ள ஒரு வீரராக விளையாடி வருகிறேன். ஆனால், வெளிநாடுகளுக்குச் சென்றால் திறமையான வீரரொருவரை கண்டால் அவருக்கு நிச்சயம் அறிவுரை வழங்குவேன்.

உதாரணமாக .பி.எல் தொடரில் என்னை பந்துவீச்சு ஆலோசராக நியமித்து இருந்தார்கள். இதற்கு இலங்கையில் உள்ள ஊடகங்கள் என்மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன. எனக்கு எதிராக பல போலியான செய்திகளை வெளியிட்டு எனக்கு சேறுபூசி இருந்தனர். ஆனால் மும்பை அணி எனது பெறுமதியை உணர்ந்து அதற்கான பெறுமதியைக் கொடுத்தார்கள்

இலங்கை – பங்களாதேஷ் வளர்ந்துவரும் டெஸ்ட் சமநிலையில் நிறைவு

சுற்றுலா இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி மற்றும்….

எனவே, எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எனது சேவையை எதிர்பார்த்தால் அதை முன்வந்து செய்வேன். அதேபோல, அணியில் உள்ள வீரரொருவர் என்னிடம் வந்து அறிவுரை கேட்டால் மறுக்காமல் நிச்சயம் சொல்லிக் கொடுப்பேன். இலங்கை அணியில் விளையாடிய, விளையாடிக் கொண்டிருக்கின்ற பல வீரர்களுக்கு எனது அறிவுரைகளை நான் வழங்கியுள்ளேன்என தெரிவித்தார்

இதேவேளை, இந்தப் போட்டியை பார்வையிடுவதற்கு அதிகளவான ரசிகர்கள் மைதானத்துக்கு வருகை தந்து இலங்கை அணியை உற்சாகப்படுத்தியிருந்தனர். இதுதொடர்பில் மாலிங்க கருத்து வெளியிடுகையில்

எமது ரசிகர்கள் மிகவும் புத்திசாலித்தனத்துடன் போட்டிகளைப் பார்க்கின்றனர். போலியான செய்திகளுக்கு காதுகொடுக்காமல் வீரர்களின் இடத்தில் இருந்து அவர்களது திறமைகளை பார்த்து வருகின்றார்கள். எனவே, வெற்றிக்காக வீரர்கள் மிகவும் ஷ்டப்படுகின்றார்கள் என்பதை அவர்களால் தெரிந்துகொள்ள முடியும். எதிர்காலத்திலும் எமது ரசிகர்கள் பொய்யான, போலியான செய்திகளை நம்பாமல் எமது வீரர்களை உற்சாகப்படுத்துவார்கள் என நான் நம்புகிறேன் என்றார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் டிக்க