அமெரிக்காவின் சியேட்டல் நகரினை தளமாக கொண்டு இயங்குகின்ற Microsoft Ventures நிறுவனத்தின் ஸ்தாபகர் தொழிலதிபர் ராகுல் சூட், லங்கா ப்ரீமியர் லீக் (LPL) T20 கிரிக்கெட் தொடரில் ஆடும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் இணை உரிமையாளராக இணைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
லங்கா ப்ரீமியர் லீக் தொடரிலிருந்து விலகும் கிறிஸ் கெயில்
அதேநேரம், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் இணை உரிமையாளராக மாறியிருக்கும் ராகுல் சூட், ஜப்னா ஸ்டாலியன்ஸ் உலகம் பூராகவும் ஒரு வியாபாரச்சின்னமாக (Brand) வளர்வதற்கு முக்கிய காரணகர்த்தாவாகவும் இருப்பார் என ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி தனது ஊடக அறிக்கையில் வெளியிட்டிருக்கின்றது.
ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் சிரேஷ்ட திட்டமிடல் அதிகாரியாக (Strategy Officer) இருக்கும் அனன்தன் அர்னோல்ட், ராகுல் சூட் தமது அணியில் இணைந்திருப்பது தமக்கு மகிழ்ச்சி தருகின்றது என கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
ராகுல் சூட் Microsoft Ventures நிறுவனம் தவிர உலகின் முன்னணி ஈ-ஸ்போர்டஸ் (இணையவழி விளையாட்டு) தளங்களில் ஒன்றான Unikrn நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். அதோடு, கணினி தயாரிப்பு நிறுவனமான Hewlett-Packard (HP) இற்கு சொந்தமாக இருக்கும் VoodooPC வகை விளையாட்டுக் கணினிகளும் ராகுல் சூட் மூலமே உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பிடித்த இளம் வீரர்கள் |Sports RoundUp – Epi 140
தான் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் இணைந்தது குறித்து கருத்து வெளியிட்ட ராகுல் சூட், “ஜப்னா அணியில் இணை உரிமையாளராக இணைந்திருப்பது கிரிக்கெட் உலகில் தனக்கென ஒரு இடத்தினைப் பதிவு செய்து கொள்ள உதவியாக இருக்கும்” எனக் கூறியிருக்கின்றார்.
இதேநேரம், இலங்கையின் முன்னணி சகலதுறை வீரரான திசர பெரரோ மூலம் வழிநடாத்தப்படும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் மற்றுமொரு உரிமையாளராக இங்கிலாந்தினைச் சேர்ந்த தொழிலதிபர் ப்ரின்டன் பகிரதன் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…