சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சலீம் மலிக், தன் மீதான தடையை நீக்கும்படி அந்நாட்டு கிரிக்கெட் சபையிடம் முதல்முறையாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 1995ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய வீரர்களான ஷேன் வோர்ன், மார்க் வோஹ் மற்றும் டிம் மே ஆகியோர் கொடுத்த சூதாட்ட புகார் 2000ஆம் ஆண்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து முன்னாள் பாகிஸ்தான் தலைவர் சலீம் மலிக்கிற்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
சுற்றுலா பாகிஸ்தான் – நெதர்லாந்து தொடர் ஒத்திவைப்பு
சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட்..
அத்துடன், முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான அதா உர் ரஹ்மானுக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டதுடன், குறித்த சூதாட்டத்துடன் தொடர்புபட்ட மேலும் 6 பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
எதுஎவ்வாறாயினும், அவர்மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடைக்கு எதிராக மேற்கொண்ட மேல்முறையீட்டை விசாரித்த லாகூர் நீதிமன்றம் கடந்த 2008இல் சலீம் மலிக்கின் வாழ்நாள் தடையை நீக்கி உத்தரவிட்டது.
2008ல் நீதிமன்றம் சலீம் மலிக்கின் வாழ்நாள் தடையை நீக்கி உத்தரவிட்டாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மற்றும் ஐசிசி அவரது தடையை இன்னும் நீக்காமல் உள்ளது.
இதேபோல, சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் போட்டித் தடைவிதிக்கப்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் மொஹட் ஆமிர், சல்மான் பட், முகமது ஆசிப் மற்றும் சர்ஜில் கான் ஆகியோருக்கு அணியில் பங்கேற்று விளையாட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் தன்னுடைய தடை ஏன் நீக்கப்படவில்லை என்று சலீம் மலிக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே, தன்னுடைய வாழ்நாள் தடையை நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மற்றும் ஐசிசிக்கு சலீம் மலிக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் மற்றும் வீரர்களுக்கு பயிற்சியாளராக பணிபுரிந்து சேவை புரிய தனக்கு இரண்டாவது சந்தர்ப்பம் வழங்குமாறும் அவர் கோரியுள்ளார்.
கடந்த 1982 முதல் 1999 வரையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் விளையாடியுள்ள 57 வயதான சலீம் மலிக், 103 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 283 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார்.
அத்துடன், 2012ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்த அவர், முன்னதாக 2008இல் அந்நாட்டின் தேசிய கிரிக்கெட் அகடமியின் பிரதான பயிற்சியாளர் பதவிக்கும் விண்ணப்பித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், அவ்விரண்டு சந்தர்ப்பங்களிலும் வாழ்நாள் தடை காரணமாக அவரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
கொரோனாவுக்காக துடுப்பு மட்டைகளை ஏலம் விடும் பங்களாதேஷ் வீரர்கள்
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களாக சகிப் அல் ஹசன் மற்றும்…
இந்நிலையில் சலீம் மலிக்கின் வாழ்நாள் தடையை நீக்க வேண்டும் என்று அவரது முன்னாள் சக வீரர்களும் அவருக்காக குரல் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுஇவ்வாறிருக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள ஆதாரத்தின்படி, 2000ஆம் ஆண்டில் சூதாட்ட புகாரில் சலீம் மலிக்குக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட பின்னர் அவர் சந்தித்த ஓரிரு சந்திப்புக்களின் தன்மை குறித்து 2013ஆம் ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்ட அறிக்கைக்கு இதுவரை பதிலளிக்கவில்லை என்பதால் அவருக்கான தடையை நீக்குவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை மறுத்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<