கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ப்ரெண்டன் மெக்கலம்

561
Getty Images

கிரிக்கெட் விளையாட்டில் டி20 போட்டி மற்றும் களத்தடுப்பிற்கென பெயர்போன வீரர்களில் ஒருவரான நியூசிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் ப்ரெண்டன் மெக்கலம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைகொடுத்தார். 

சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு 2016 ஆம் ஆண்டு விடைகொடுத்ததன் பின்னர் தொடர்ச்சியாக வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் விளையாடி வந்தார். இந்நிலையில் 1999 ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டில் காலடி வைத்த மெக்கலம் 20 வருடங்களின் பின்னர் அனைத்து விதமான கிரிக்கெட் வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

அசத்தல் துடுப்பாட்டத்தால் தரவரிசையில் முன்னேறிய ஸ்டீவ் ஸ்மித்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின்….

இந்தியன் பிரிமியர் லீக், பாகிஸ்தான் சுப்பர் லீக் போன்ற தொடர்களைப் போன்ற ஒரு தொடரானது தற்போது கனடாவில் க்ளோபல் டி20 கனடாஎன்ற பெயரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் டொரன்டோ நெஷனெல்ஸ் அணிக்காக மெக்கலம் விளையாடி வருகிறார். இந்நிலையில் குறித்த தொடருடன் தான் முழு கிரிக்கெட் விளையாட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று (05) அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளார். 

தனது ஓய்வு செய்தியை வெளியிட்டுள்ள மெக்கலம் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது நடைபெறும் கனடா டி20 நிறைவுக்கு வந்த பிறகு பெருமையுடனும், திருப்தியுடனும் நான் கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைகொடுப்பதை அறிவிக்கின்றேன். எனது 20 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் நான் சாதித்ததை எண்ணி பெருமையடைகின்றேன்.

கிரிக்கெட் விளையாட்டில் முதல் முதலில் நுழைந்த போது நான் கனவு கண்டதை விட அதிகமாக சில மாதங்கள் கடினமாக இருப்பதை நான் உணர்ந்தேன். நான் விளையாடிவந்த பாதை மற்றும் அதில் சாதித்த விடயங்களை பெருமையுடன் திரும்பி பார்க்கின்றேன்.

எந்தவொரு கல்லும் என்னை நோக்கி திரும்பவில்லை என்பதை அறிந்து நான் கிரிக்கெட்டை விட்டு விலகுகிறேன். மேலும் இது கடினமான பயணமாக இருந்தது. ஆனால் நல்ல விடயங்களும் முடிவுக்கு வரவேண்டியுள்ளது’ என தெரிவித்துள்ளார். 

க்ளோபல் டி20 கனடா தொடரில் இலங்கையின் 3 அதிரடி வீரர்கள்

க்ளோபல் டி20 கனடா கிரிக்கெட் தொடரின்…

1981 ஆம் ஆண்டு பிறந்த ப்ரெண்டன் மெக்கலம் தனது 21 ஆவது வயதில் இளம் வீரராக 2002 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் முதல் முறையாக நியூசிலாந்து அணிக்காக சர்வதேச அறிமுகம் பெற்றார். 

அதன் பின்னர் ஒருநாள் சர்வதேச போட்டிகளிலிருந்து 2004 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணியுடன் வைத்து நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் அறிமுகத்தையும் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் அடுத்த ஆண்டில் (2005) டி20 கிரிக்கெட் போட்டி அறிமுகமான பிறகு அதிலும் தனது தடத்தை பதித்துக்கொண்டார். 

இவ்வாறு நியூசிலாந்து அணிக்காக விளையாடிவந்த மெக்கலம் கடந்த 2016 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைகொடுத்தார். நியூசிலாந்து அணியில் ஒரு விக்கெட் காப்பாளராக இருந்து பின்னர் ஒரு அணியை வழிநடத்தும் அளவுக்கு முன்னேறியவர் இந்த ப்ரெண்டன் மெக்கலம். 

நியூசிலாந்து அணிக்காக 101 டெஸ்ட், 260 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 71 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் டெஸ்ட் போட்டிகளில் 6,453 ஓட்டங்களையும், ஒருநாள் போட்டிகளில் 6,083 ஓட்டங்களையும், டி20 போட்டிகளில் 2,140 ஓட்டங்களையும் குவித்துள்ளார். 

டி20 அரங்கில் டில்சானின் சாதனையை முறியடித்த கோஹ்லி

இருதரப்பு தொடருக்காக ஐக்கிய அமெரிக்கா…

விக்கெட் காப்பாளராக உருவெடுத்து பின்னர் ஒரு சிறந்த களத்தடுப்பாளராக மாறிய மெக்கலம் மூவகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 432 சர்வதேச போட்டிகளில் கிட்டத்தட்ட (496) 500 பிடியெடுப்புக்களை செய்துள்ளார். மேலும் விக்கெட் காப்பாளராக திழந்த காலப்பகுதியில் 34 ஸ்டம்பிங்களையும் நிகழ்த்தியுள்ளார். 

டி20 போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களை குவித்தவர்கள் வரிசையில் கிறிஸ் கெய்லுக்கு அடுத்ததாக 9,922 ஓட்டங்களை குவித்து இரண்டாமிடத்தில் மெக்கலம் காணப்படுகின்றார். 2005 ஆம் ஆண்டு டி20 என்ற ஒரு கிரிக்கெட் போட்டி கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளிலும் மெக்கலம் மறக்கப்படாத ஒரு வீரராக காணப்படுகின்றார். அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, கனடா போன்ற நாடுகளில் ஏகப்பட்ட அணிகளுக்காக மெக்லம் விளையாடியுள்ளார். 

இவ்வாறு டி20 போட்டிகள் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு வீரராக  ப்ரெண்டன் மெக்கலம் காணப்படுகின்றார். மெக்கலமின் ஓய்வின் மூலம் ஒரு சிறந்த வீரரை கண்டிப்பாக கிரிக்கெட் உலகம் இழக்கிறது என்பதில் ஐயமில்லை.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க