பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் மொஷர்ரப் ஹொசைனுக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதன்படி, கொவிட் – 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 4ஆவது பங்களாதேஷ் கிரிக்கெட் வீரராக மொஷர்ரப் ஹொசைன் பதிவானார்.
உலகெங்கிலும் பரவி வரும் கொவிட் – 19 வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்து எந்தவித உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை.
நான்கு மாதங்களின் பின் பயிற்சிகளில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்
அதிலும் குறிப்பாக, கொவிட் – 19 வைரஸ் பரவலினால் பல கிரிக்கெட் வீரர்களும் பாதிப்படைந்தனர். பாகிஸ்தான் அணியை சேர்ந்த முன்னாள் சகலதுறை வீரர் சஹீட் அப்ரிடி உட்பட மொத்தம் ஏழு பாகிஸ்தான் வீரர்களுக்கு கொவிட் – 19 வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். எனினும், சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பினர்.
இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி பாகிஸ்தானின் முன்னாள் உள்ளூர் கிரிக்கெட் வீரரான ஜாபர் சர்பராஸ் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தார். கொரோனா வைரஸினால் உயிரிழந்த முதலாவது கிரிக்கெட் வீரராக அவர் இடம்பிடித்தார்.
இந்த நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஷ்ரபி மோர்தசாவும் கொவிட் – 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டார்.
அத்துடன், பங்களாதேஷ் ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் தமிம் இக்பாலின் சகோதரனும், முன்னாள் வீரருமான நபீஸ் இக்பால், கடந்த 2 வருடங்களாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் இடக்கை சுழல்பந்து வீச்சாளர் நஸ்முல் இஸ்லாம் ஆகிய இருவரும் கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர்.
தென்னாபிரிக்க கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று
இதுஇவ்வாறிருக்க, தற்போது பங்களாதேஷ் அணியை சேர்ந்த மற்றுமொரு வீரரான மொஷர்ரப் ஹொசைனுக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று இருப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
பங்களாதேஷ் அணிக்காக ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள 38 வயதான இடதுகை சுழல் பந்துவீச்சாளர் மொஷர்ரப் ஹொசைன், மூளைக் கட்டிக்கான அறுவை சிகிச்சை செய்து நான்கு மாதங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அவருக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. ஆரம்பத்தில் அவரது தந்தைக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்த நிலையில், மொஷர்ரப் ஹொசைனும் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதேநேரம், கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையில் அவருக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் வீடு திரும்பி சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குமார் சங்கக்காரவுக்கு விருப்பமான துடுப்பாட்ட வீரர்கள்
இந்த நிலையில், தனக்கு எவ்வாறு கொவிட் – 19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது தொடர்பில் டெய்லி ஸ்டார் பத்திரிகைக்கு மொஷர்ரப் வழங்கிய பேட்டியில்,
எனது தந்தைக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் நான் சில அறிகுறிகளை அனுபவித்தேன். இதனால் பி.சி.ஆர் பரிசோதனை செய்தேன். என் உடல்நிலை இதுவரை நன்றாக இருக்கிறது, நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்தியுள்ளேன்.
என் மனைவிக்கும், என் குழந்தைக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். தற்போது அவர்கள் எனது மனைவியின் பெற்றோர்களிடம் பாதுகாப்பாக உள்ளனர் என தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த வாரம், பங்களாதேஷ் கால்பந்து அணியின் 18 வீரர்கள் பி.சி.ஆர் பரிசோதனை செய்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க