ஒரு காலினை மாத்திரம் கொண்ட சீன நாட்டு கால்பந்து வீரர் ஒருவர் விளையாடும் காணொளி (Video) ஒன்று சீன ரசிகர்களுக்கு மத்தியிலான சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து விளையாட்டு உலகம் அவர் பக்கம் திரும்பியுள்ளது.
ஹீ யியி (He Yiyi) என்ற பெயரினைக் கொண்ட 21 வயதாகும் மாற்றுத் திறனாளி கால்பந்து வீரரான இவர், புற்று நோயின் காரணமாக சிறு வயதில் தனது இடது காலினை இழக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாகியிருந்தார்.
ஜேர்மனியில் கால்பந்து வீரராக ஜொலிக்கும் இலங்கை வீரர் வசீமின் கனவு நனவாகுமா?
விளையாட்டுக்கு இன, மதம், மொழி வேறுபாடு இல்லை என்பது போல நாடு, வலயம், கண்டம் என்ற…
தற்போது ஊன்று கோல் மூலம் கால்பந்துப் போட்டிகளில் விளையாடிவரும் ஹீ, “ சிறகுகளை இழந்த தேவதை (Angel with Broken Wings) “, “ ஒற்றைக் காலுடனான கால்பந்து ராஜா” (Ball King with One Leg)” மற்றும் “மாயஜாலப் பையன் (Magic Boy)” போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றார்.
கண்காட்சிக் கால்பந்துப் போட்டியொன்றில் ஹீ விளையாடிய காணொளி தற்போது வைரலாகி இருக்கின்றது. அந்த வீடியோவில் இவர் நுணுக்கமாக பந்தினை எடுத்துச் செல்வது, ஒரு மாற்றுத்திறனாளி வீரராக அவர் எதிர்கொள்ளும் சவால்களை அவரே கூறுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருக்கின்றன. அதோடு குறித்த ஒளி நாடாவினை கிட்டத்தட்ட 4 மில்லியனுக்கும் அதிகமானோர் இதுவரையில் பார்வையிட்டுள்ளனர்.
தனது 12ஆவது வயதில் எலும்பு சம்பந்தமான புற்று நோய் ஒன்றுக்கு ஆளாகியிருந்தாக கூறிய ஹீ யியி இற்கு, (தொழில்சாராத) உள்ளூர் கால்பந்து போட்டிகளில் விளையாடுவதற்குக்கூட பல தடவைகள் வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தன.
“ நான் எந்த வீரருக்கும் தீங்கு விளைவிப்பவன் கிடையாது (என்னை விளையாட அனுமதிக்காமல் விட்டதற்கு போட்டி ஒழுங்கமைப்பாளர்களுடன்) ஒரு தடவை சண்டையிட்டிருக்கின்றேன். “ என தனக்கு விளையாட அனுமதி மறுக்கப்பட்டதை விபரித்த ஹீ, “தொழில்சாராத கால்பந்துப் போட்டிகளில் அனைவருக்கும் பங்கேற்க முடியும். ஏனையோர் விளையாடும் போது என்னால் மட்டும் ஏன் பங்கேற்க முடியாது இருக்கின்றது. இது நியாயமான விடயம் இல்லையே? “ என அப்போது தான் அடைந்த ஆதங்கத்தினை இவ்வாறு வெளிப்படுத்தியிருந்தார்.
ஹீ தனது கால்களில் ஒன்றை இழப்பதற்கு முன்னர், 2008ஆம் ஆண்டில் கால்பந்து விளையாட்டில் காட்டிய வித்தியாசமான திறமையினைக் கண்ட பிரான்ஸ் தொண்டு நிறுவனம் ஒன்று அந்நாட்டிற்கு அழைத்துச் சென்று அவரை தொழில் முறை கால்பந்து வீரர் ஒருவராக மாற்ற ஒரு வாய்ப்பினை ஏற்படுத்த முனைந்திருந்தது.
ஜேர்மனியில் கால்பந்து வீரராக ஜொலிக்கும் இலங்கை வீரர் வசீமின் கனவு நனவாகுமா?
விளையாட்டுக்கு இன, மதம், மொழி வேறுபாடு இல்லை என்பது போல நாடு, வலயம், கண்டம் என்ற…
பிரான்சுக்கு செல்ல கடவுச் சீட்டு எடுப்பதற்கு முன்னரே தனது இடது காலில் வலியினை இவர் உணர, அதனை வைத்தியர்களிடம் பரிசோதித்த போது சிறுவர்கள் மற்றும் வளர்ந்தவர்களுக்கு வரும் ஒஸ்டீயோசர்கோமா (Osteosarcoma) என்னும் அரிய வகைப் புற்று நோய் இவருக்கு வந்திருப்பது தெரிய வந்தது. எனவே, வைத்தியர்கள் இவரது நீண்ட ஆயுளுக்கு ஒரே தீர்வு இவரது குறிப்பிட்ட நோய் ஏற்பட்டிருக்கும் காலினை அகற்றுவதே எனக் கூறியிருந்தனர்.
கால்பந்துப் போட்டிகளில் பங்கேற்கும் போது, எதிரணியினர் சில தடவைகள் ஹீ இன் ஊனத்தை கிண்டலடித்து பேசியிருப்பதனை “ நீ இங்கு என்ன செய்கின்றாய் எனக்கேட்டு அவர்கள் என்னை போட்டியின் முதல் நிமிடங்களிலேயே வெளியேற்ற வேண்டி நின்றனர். “ எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஊன்று கோலுக்குப் பதிலாக செயற்கை கால்களை ஹீ இற்கு பொருத்திக்கொள்ள முடியுமாக இருப்பினும், சத்திர சிகிச்சையின் போது வெட்டப்பட்ட அவரது இடது கால் இருக்கும் இடத்தில் செயற்கை காலினை பொருத்தி விளையாடுவது என்பது அவருக்கு குறைந்தளவு வினைத்திறனை தரும் விதத்திலேயே காணப்படுகின்றது. இதனால், ஊன்று கோலோடு விளையாடுவதையே ஹீ விரும்புகின்றார்.
முயற்சிகளை தளரவிடாது தடைகளைத் தாண்டி தொடர்ந்து கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி இன்று உலகையே தன்பக்கம் திரும்ப வைத்திருக்கும் ஹீ, உடலில் உள்ள ஊணம் காரணமாக தமது கனவுகளினை கைவிட்ட மக்களுக்கு பின்வருமாறு ஊக்கம் தருகின்றார்.
“ வாழ்க்கையில் எப்போதும் எந்த விடயத்தினையும் நேர் மனப்பாங்கோடு நோக்குங்கள், உங்களது இயலாமைக்காக வீட்டிலேயே முடங்கி விடாதீர்கள் “
“ உங்களைக் காப்பற்றக்கூடியவர் நீங்கள் ஒருவர் மாத்திரமே. அடுத்தவர்கள் புன்னகைக்க வைப்பதை விட சிறந்த விடயம் ஏதாவது இருக்கின்றதா? “
சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் பெரிதாக வெற்றியளிக்காத அணிகளில் ஒன்றாக காணப்படும் சீனா, சாதிக்கத் துடிக்கும் ஹீ யியி போன்றவர்களின் தன்னம்பிக்கையினை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என அந்நாட்டு கால்பந்து ரசிகர்களில் சிலர் கூறிவருகின்றனர்.