பாகிஸ்தான் செல்லும் இலங்கை A அணி; போட்டி அட்டவணை வெளியானது

Sri Lanka ‘A’ tour of Pakistan

2
Sri Lanka ‘A’ tour of Pakistan

இலங்கை A கிரிக்கெட் அணியானது எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடர் போன்ற இரு தொடர்களில் பாகிஸ்தான் A கிரிக்கெட் அணியுடன் மோதவுள்ளது.

அதன்படி நவம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை 2 போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25, 27 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த 2 தொடர்களும் நடைபெறுகின்ற இடம் மற்றும் மைதானங்கள் இதுவரை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

போட்டி அட்டவணை

 

முதல் டெஸ்ட் போட்டி – நவம்பர் 11 முதல் 11 வரை 

 

2வது டெஸ்ட் போட்டி – நவம்பர் 18 முதல் 21 வரை

 

முதல் ஒருநாள் போட்டி – நவம்பர் 25

 

2வது ஒருநாள் போட்டி – நவம்பர் 27

 

3வது ஒருநாள் போட்டி – நவம்பர் 29

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<