தென்னாபிரிக்கா A கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 நான்கு நாட்கள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதன்படி, 3 ஒருநாள் போட்டிகள் முறையே ஜூன் 4, 6 மற்றும் 8ஆம் திகதிகளிலும், நான்கு நாட்கள் போட்டிகள் ஜூன் 12 மற்றும் 22ஆம் திகதிகளிலும் நடைபெற உள்ளது. எனினும், போட்டி நடைபெறும் மைதானங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், குறித்த தொடருக்கான ஒளிபரப்பு உரிமையை பெற விரும்பும் ஊடக நிறுவனங்கள் தமது விருப்பத்தை வெளிப்படுத்த முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை A கிரிக்கெட் அணி இறுதியாக இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் கடந்த பெப்ரவரி போட்டியிட்டதுடன், 2 போட்டிகளைக் கொண்ட நான்கு நாட்கள் தொடர் 0-0 என சமநிலையில் முடிவடைந்த நிலையில், ஒருநாள் தொடரை 2-1 என இலங்கை A அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை
ஒருநாள் போட்டி
முதல் ஒருநாள் போட்டி – ஜூன் 4
இரண்டாவது ஒருநாள் போட்டி – ஜூன் 6
மூன்றாவது ஒருநாள் போட்டி – ஜூன் 8
நான்கு நாட்கள் போட்டி
முதல் போட்டி – ஜூன் 12 முதல் 15 வரை
இரண்டாவது போட்டி – ஜூன் 19 முதல் 22 வரை
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<