19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை கால்பந்து அணிகளுக்கு இடையிலான கொத்மலே சம்பின்ஷிப் – 2016 சுற்றுப் போட்டியின் இறுதிக் கட்டப் போட்டிகள் இடம்பெறும் இடம் மற்றும் காலம் என்பன குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கை கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு அமைய, இந்த சுற்றுத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள், மூன்றாம் இடத்திற்கான போட்டி மற்றும் இறுதிப் போட்டிகள் என்பன யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டு அரங்கில் நவம்பர் மாதம் 3ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் இடம்பெறும்.
ஏற்கனவே நடைபெற்று முடிந்த காலிறுதிச் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் கோழும்பு சிட்டி லீக் கால்பந்து மைதானத்தில் கடந்த மாத இறுதி வாரத்தில் இடம்பெற்றன.
முதலாவது அரையிறுதிப் போட்டி
நவம்பர் 3ஆம் திகதி மாலை 5 மணிக்கு
புனித பத்திரிசியார் கல்லூரி எதிர் புனித ஜோசப் வாஸ் கல்லூரி
இரண்டாவது அரையிறுதிப் போட்டி
நவம்பர் 3ஆம் திகதி இரவு 7 மணிக்கு
புனித ஹென்ரியரசர் கல்லூரி எதிர் கொழும்பு ஸாஹிரா கல்லூரி
மூன்றாம் இடத்திற்கான போட்டி
நவம்பர் 5ஆம் திகதி மாலை 5 மணிக்கு
இறுதிப் போட்டி
நவம்பர் 5ஆம் திகதி இரவு 7 மணிக்கு
ஏற்கனவே நடைபெற்று முடிந்த காலிறுதிச் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் கோழும்பு சிட்டி லீக் கால்பந்து மைதானத்தில் கடந்த மாத இறுதி வாரத்தில் இடம்பெற்றன.
காலிறுதியின் முடிவுகள்
புனித பத்திரிசியார் கல்லூரி (01) – (01) ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி
இந்தப் போட்டி சமநிலையில் முடிவடைந்ததைத் தொடர்ந்து வெற்றியைத் தீர்மானிப்பதற்காக பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்போது புனித பத்திரிசியார் கல்லூரி அணியின் கோல்காப்பாளர் மிகவும் சிறப்பாக செயற்பட்டு 3 தடுப்புக்களை மேற்கொண்டமையினால் அவ்வணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் வென்றது.
புனித ஜோசப் வாஸ் கல்லூரி (05) – (02) ஹோலி க்ரொஸ் கல்லூரி
புனித ஹென்ரியரசர் கல்லூரி (02) – (00) மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி
கொழும்பு ஸாஹிரா கல்லூரி (04) – (01) டி மெசனொட் கல்லூரி