பிரீமா (Prima) 15 வயதின் கீழ் இளையோர் கிரிக்கெட் லீக் தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை (21) ஆரம்பமாகி இலங்கை வர்த்தக சங்க மைதானம் மற்றும் ரத்மலானை என்.எஸ்.ஜி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் இலங்கையைச் சேர்ந்த சிறந்த 15 வயதின் கீழ் பாடசாலை வீரர்கள், 5 அணிகளாக வகுக்கப்பட்டு போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.
வகுக்கப்பட்டுள்ள 5 அணிகளுக்கும் கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கண்டி, காலி மற்றும் தம்புள்ள என பெயரிடப்பட்டுள்ளன. இந்த ஐந்து அணிகளுக்கும் இடையிலான போட்டிகள் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 29ஆம் திகதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், போட்டிகள் அனைத்தும் இலங்கை வர்த்தக சங்க மைதானம் மற்றும் ரத்மலானை என்.எஸ்.ஜி மைதானத்தில் நடைபெறவுள்ளன.
போட்டித்தொடரை பொருத்தவரை ஒவ்வொரு அணிகளும் தலா 4 போட்டிகளில் விளையாடவுள்ளதுடன், இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இறுதிப் போட்டியானது இலங்கை வர்த்தக சங்க மைதானத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இலங்கை பாடசாலை 15 வயதின் கீழ் கிரிக்கெட் போட்டிகள் கொவிட்-19 தொற்று காரணமாக நீண்டகாலமாக நடைபெறாமல் இருந்த நிலையில், இந்தப் போட்டித் தொடரானது 15 வயதின் கீழ் பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
போட்டி அட்டவணை
திகதி | போட்டி | மைதானம் | போட்டி | மைதானம் | ||
நவம்பர் 21 | காலி | கொழும்பு வடக்கு | எம்.சி.ஏ | கொழும்பு தெற்கு | கண்டி | என்.எஸ்.ஜி |
நவம்பர் 22 | தம்புள்ள | கண்டி | எம்.சி.ஏ
|
கொழும்பு தெற்கு | காலி | என்.எஸ்.ஜி
|
நவம்பர் 24 | கொழும்பு வடக்கு | கொழும்பு தெற்கு | எம்.சி.ஏ
|
காலி | தம்புள்ள | என்.எஸ்.ஜி
|
நவம்பர் 25 | தம்புள்ள | கொழும்பு தெற்கு | எம்.சி.ஏ
|
கண்டி | கொழும்பு வடக்கு | என்.எஸ்.ஜி
|
நவம்பர் 28 | கண்டி | காலி | எம்.சி.ஏ | கொழும்பு வடக்கு | தம்புள்ள | என்.எஸ்.ஜி
|
நவம்பர் 29 | இறுதிப் போட்டி – முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள்– கொழும்பு வர்த்தக சங்க மைதானம் (MCA Ground) |
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<