ThePapare கால்பந்து சம்பியன்ஷிப்: காலிறுதியில் மோதும் அணிகள்

180

இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள பாடசாலைகளுக்கு இடையிலான ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்று லீக் ஆட்டங்கள் கடந்த 3ஆம் திகதி நிறைவுக்கு வந்தன.

கடந்த ஜனவரி மாதம் ஆரம்பமாகிய இப்போட்டித் தொடரில் நாடளாவிய ரீதியில் இருந்து 20 பாடசாலை அணிகள் பங்குபற்றியிருந்ததுடன், லீக் சுற்று ஆட்டங்கள் தொடர்ந்து ஐந்து வாரங்கள் நடைபெற்றன.

இதன்படி, குழு இல் இடம்பிடித்து 4 போட்டிகளில் விளையாடி தலா இவ்விரண்டு வெற்றிகளைப் பதிவு செய்த மருதானை புனித ஜோசப் கல்லூரி அணியும், யாழ். மத்திய கல்லூரி அணியும் காலிறுதிக்குத் தகுதிபெற்றன

புனித பெனடிக் கல்லூரியை இலகுவாக வீழ்த்தியது கொழும்பு ஸாஹிரா

பாடசாலை அணிகளுக்கு இடையிலான Thepapare கால்பந்து சம்பியன்ஷிப்…

குழு சி இல் இடம்பிடித்த அணிகளைப் பொறுத்தமட்டில் மருதானை ஸாஹிரா கல்லூரி அணி, தாம் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள, ஸாஹிரா கல்லூரியுடன் மாத்திரம் தோல்வியைத் தழுவிய கிண்ணியா அல்அக்ஸா கல்லூரி அணி 9 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது அணியாக காலிறுதி சுற்றுக்குத் தெரிவாகியது.

இதுஇவ்வாறிருக்க, குழு டி இல் நான்கு அணிகள் மாத்திரம் இடம்பெற்றதுடன், இதில் 3 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி மற்றும் ஒரு போட்டியில் சமநிலை அடைந்த பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி மற்றும் யாழ். புனித ஹெண்ரியரசன் கல்லூரி அணிகள் காலிறுதிக்குத் தகுதிபெற்றன.

குறித்த குழுவில் இடம்பிடித்த கொழும்பு ஹமீட் அல்-ஹுஸைனி பங்குகொண்ட 3 போட்டிகளையும் சமநிலையில் நிறைவு செய்ததன் காரணமாக புள்ளிகள் பட்டியலில் 3 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பெற்று ஏமாற்றத்துடன் தொடரில் இருந்து வெளியேறியது

இதனிடையே முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவுக்குவரும் போது அதிக கோல்களைப் பெற்றுக்கொண்ட வீரர்களாக கந்தானை டி மெசனொட் கல்லூரியின் அவிஷ் தேஷான் மற்றும் மருதானை புனித ஜோசப் கல்லூரியின் ஷெனால் சந்தேஷ் (தலா 5 கோல்கள்) ஆகிய இருவரும் முதலிரண்டு இடங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்

தலா நான்கு கோல்களைப் அடித்து அடுத்தடுத்த  இடங்களில் மருதானை ஸாஹிரா கல்லூரியின் மொஹமட் ஆகிப், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி வீரர்களான நாகேஷ்வரன் பவிராஜ் மற்றும் ரஜிகுமார் சாந்தன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இந்த நிலையில், ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிப் போட்டிகள் இன்று (07) முதல் ஆரம்பமாகின்றன.

தினேஷின் அபாரத் தடுப்பினால் புளு ஸ்டாரை வீழ்த்தி பொலிஸ் இறுதிப் போட்டியில்

களுத்துறை புளு ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை பெனால்டியில் 4-2 என…

எனவே ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் குறித்த அனைத்து விதமான தகவல்கள், கட்டுரைகள், புகைப்படங்களை எமது ThePapare.com  இணையத்தளத்தின் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.