முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் பங்கேற்போடு கட்டாரில் நடைபெறவுள்ள லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் ( Legends League Cricket) மாஸ்டர்ஸ் 2023 தொடரில் களமிறங்கும் ஏசியா லயன்ஸ் அணியில் இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் ஐவர் இடம்பிடித்துள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் கலந்துகொள்ளும் லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் மாஸ்டர்ஸ் தொடரின் இரண்டாவது அத்தியாயம் மார்ச் 10ஆம் திகதி முதல் மார்ச் 20ஆம் திகதி வரை கட்டார் தலைநகர் டோஹாவில் உள்ள ஏசியன் டவர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கட்டார் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இம்முறை போட்டித் தொடரில் ஏசியா லயன்ஸ், இந்தியா மஹாராஜாஸ் மற்றம் வேர்ல்ட் ஜயண்ட்ஸ் ஆகிய 3 அணிகள் களமிறங்கவுள்ளன.
இந்த நிலையில், கடந்த ஆண்டைப் போல இம்முறை லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 5 முன்னாள் வீரர்கள் ஏசியா லயன்ஸ் அணிக்காக ஆடவுள்ளனர்.
இதன்படி உபுல் தரங்க, திலகரட்ன டில்ஷான், திசர பெரேரா, டில்ஹார பெர்னாண்டோ மற்றும் இசுரு உதான ஆகியோர் ஏசியா லயன்ஸ் அணிக்காக ஆடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- வனிந்து ஹஸரங்கவை தக்கவைத்த மென்செஸ்டர் அணி
- IPL தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!
- IPL தலைவர்களாக அவதாரம் எடுக்கும் வோர்னர், எய்டன்
இதனிடையே கடந்த ஆண்டு லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் ஏசியா லயன்ஸ் அணிக்காக விளையாடிய சனத் ஜயசூரிய, ரொமேஷ் களுவிதாரன, சமிந்த வாஸ், முத்தையா முதளிதரன், நுவன் குலசேகர மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் இம்முறை போட்டித் தொடரில் இடம்பபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஏசியா லயன்ஸ் அணியில் இலங்கையின் முன்னாள் வீரர்கள் தவிர பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் முன்னாள் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
அத்துடன், கடந்த ஆண்டைப் போல இம்முறையும் ஏசியா லயன்ஸ் அணியின் தலைவராக பாகிஸ்தானின் முன்னாள் நட்சத்திரம் மிஸ்பா உல் ஹக் செயல்படவுள்ளார்.
ஏசியா லயன்ஸ் குழாம்
உபுல் தரங்க, திலகரட்ன டில்ஷான், திசர பெரேரா, டில்ஹார பெர்னாண்டோ, இசுரு உதான, சொஹைப் அக்தார், சஹீட் அப்ரிடி, மிஸ்பா உல் ஹக், அப்துல் ரசாக், அஸ்கார் ஆப்கான், பராஸ் கத்கா, ராஜின் சலெஹ், அப்துர் ரசாக்.
The lions have assembled! 🦁
Watch them battle it out in the upcoming season of #LLCMasters from March 10th – 20th 2023 only on @starsportsindia!#LegendsLeagueCricket #LLCT20 #AsiaLions pic.twitter.com/G6RZ8ZPAmC
— Legends League Cricket (@llct20) February 24, 2023
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<