சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான ஆப்கான் குழாம் அறிவிப்பு

81

2025ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கெடுக்கும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.  

சம்பியன்ஷ் கிண்ணத்துக்கான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

அடுத்த மாதம் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகவிருக்கும் நிலையில் நேற்று (12) ஆப்கானிஸ்தான் தமது வீரர்கள் குழாத்தினை வெளியிட்டிருந்தது. ஹஸ்மத்துல்லா சஹிதி தலைமையில் அறிவிக்கப்பட்ட ஆப்கான் குழாத்தில் முழங்கால் உபாதை காரணமாக சுமார் ஆறு மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடாதிருந்த முன்வரிசை துடுப்பாட்டவீரர் இப்ராஹிம் சத்ரானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. 

 அதேநேரம் இளம் சுழல்பந்துவீச்சாளர் அல்லா கசான்பார், முன்வரிசை வீரர் செதிகுல்லா அடால் ஆகியோருக்கும் ஆப்கான் அணியினை முதன் முறையாக ICC இன் சிரேஷ்ட வீரர்களுக்கான பல்நாட்டு தொடர் ஒன்றில் பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது 

எனினும் உபாதைச்சிக்கல்கள் கருதி சுழல்வீரரான முஜிபுர் ரஹ்மானிற்கு சம்பியன்ஸ் கிண்ணத்தில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆப்கானின் எஞ்சிய வீரர்கள் குழாம் 2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரில் உள்வாங்கப்பட்ட வீரர்களுடன் பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது 

ஆப்கான் அணி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் குழு B இல் உள்வாங்கப்பட்டிருப்பதோடு அது தமது முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணியினை பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது 

ஆப்கான் குழாம் 

ஹஸ்மத்துல்லா சஹிதி (தலைவர்), ரஹ்மத் சாஹ் (பிரதி தலைவர்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இக்ராம் அலிகில், இப்ராஹிம் சத்ரான், செதிகுல்லா அடால், அஷ்மத்துல்லா ஒமர்சாய், மொஹமட் நபி, குல்படின் நயீப், ரஷீட் கான், அல்லா கசான்பார், நூர் அஹ்மட், பசால்ஹக் பரூக்கி, நவீட் சத்ரான், பரீட் அஹ்மட் மலீக் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<