லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரில் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணி வீரரான பினுர பெர்னாண்டோவிற்கு ஜூலை 02ஆம் திகதி கண்டி பல்கோன்ஸ் அணியுடன் நடைபெற்ற போட்டியில் ஒழுக்க விதிகளை மீறி நடந்த குற்றச்சாட்டிற்காக போட்டிக்கட்டணத்தில் 20% அபாரதமாக விதிக்கப்பட்டிருக்கின்றது.
>>இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராகும் சனத் ஜயசூரிய!
பினுர பெர்னாண்டோ குறித்த போட்டியில் நடுவர்களின் தீர்ப்பிற்கு எதிராக செயற்பட்டமைக்காகவே போட்டிக்கட்டணத்தில் 20% அபாரதமாக செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதோடு, அவருக்கு நன்னடத்தை விதிமிறல் புள்ளி ஒன்றும் வழங்கப்பட்டிருக்கின்றது.
இதேநேரம் குறித்த போட்டியில் LPL சீருடை மற்றும் உபகரணங்களுக்காக போடப்பட்டிருந்த விதிகளை மீறிய குற்றச்சாட்டிலும் பினுர பெர்னாண்டோவிற்கு போட்டிக்கட்டணத்தில் 25% அபாரதமாக விதிக்கப்பட்டிருக்கின்றது.
மறுமுனையில் அதே போட்டியில் LPL சீருடை மற்றும் உபகரணங்களுக்காக போடப்பட்டிருந்த விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கண்டி பல்கோன்ஸ் அணி வீரர் வனிந்து ஹஸரங்கவிற்கும் அவரது போட்டிக்கட்டணத்தில் 25% அபாரதமாக விதிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.