இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை இழந்ததால் தோல்வியை சந்திக்க நேரிட்டதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஆரோன் பின்ஞ்ச் தெரிவித்துள்ளார்.
இந்தியா – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நேற்று (09) நடைபெற்ற உலகக் கிண்ண லீக் போட்டியில் இந்திய அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தவானின் சதத்தோடு அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா
கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 14ஆவது லீக் போட்டியில் இந்திய அணி…….
ஆரம்பத்தில் இருந்து இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகமாக இருந்தது. அவுஸ்திரேலிய அணி உலகக் கிண்ணத் தொடருக்கு முன் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இருந்ததால் இரண்டு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
எனினும், அதை சமாளித்த இந்தியா, 2003 உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய அணியிடம் இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு மற்றொரு ஒரு உலகக் கிண்ணத் தோல்வியை அந்த அணிக்கு பரிசளித்தது.
இந்த நிலையில், தோல்விக்கு பிறகு அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ச் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையில், ”கடைசி 10 ஓவர்களில் 120 ஓட்டங்களை இந்தியாவுக்கு வழங்கியது மிகவும் அதிகமாகும். நாங்கள் ஆரம்பத்திலே அதிக விக்கெட்டுகளை கைப்பற்றவில்லை. அதேபோல, அனுபவமிக்க, அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கும் போது இவ்வாறான ஆடுகளங்களில் புதிய பந்தின் மூலம் அவர்களது விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது மிகவும் கடினமாகும். ஆனால், இந்திய அணி மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்தது. அவர்கள் மிகவும் அபாரமாக விளையாடியிருந்தார்கள்.
அதேபோல, 10 முறைகளில் விக்கெட்டை வீழ்த்த முடியுமானால் அதில் ரன் அவுட் முறையும் ஒன்றாகும். டேவிட் வோர்னருக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி இருந்தனர். இதனால் அவருக்கு வேகமாக ஓட்டங்களைக் குவிக்க முடியாமல் போனது. அவருடைய வழமையான போர்முக்கு வருவதற்கு இன்னும் சில காலங்கள் எடுக்கும். அவரொரு உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர் என்பதுடன் அவர் எங்களுடன் தொடர்ந்து பயணிப்பார்” என அவர் தெரிவித்தார்.
இலங்கை அணியின் முக்கிய வீரருக்கு உபாதை
வேகப் பந்துவீச்சாளரான நுவன் பிரதீப் விரல் ……..
இதேநேரம், இந்திய அணியின் துடுப்பாட்டம் குறித்து ஆரோன் பின்ச் கருத்து வெளியிடுகையில், முதல் 10 ஓவர்களில் இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஆடுகளத்தின் தன்மையை அறிந்து கொண்டு நிதானமாக விளையாடியிருந்தனர். அதுதான் எமக்கு மிகப் பெரிய நெருக்கடியைக் கொடுத்திருந்தது. இவ்வாறான நல்ல ஆடுகளங்களில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை அவர்கள நிரூபித்துக் காண்பித்தனர். உண்மையில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடியிருந்தனர்.
அதேபோல, இந்திய வீரர்கள் சிறப்பாக பந்துவீசியிருந்தனர். அதிலும் மத்திய வரிசையில் இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் எமக்கு நெருக்கடி கொடுத்திருந்தனர். இதனால் எமக்கு விரைவாக ஓட்டங்களைக் குவிக்க முடியாமல் போனது.
நாங்கள் தற்போது 3 போட்டிகளில் விளையாடி விட்டோம். எனவே எதிர்வரும் நான்கு, ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் இந்தத் தொடரில் முன்னோக்கிச் செல்ல முடியும். நாங்கள் இந்தத் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தோம். எமது வீரர்கள் அனைவரும் சிறந்த உடற்தகுதியுடன் உள்ளனர். அவர்களது மனநிலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை.
எனவே, உலகக் கிண்ணப் போட்டிகளில் நாங்கள் வெவ்வேறு அணிகளுடன் மோத வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் வித்தியாசமான முறையில் இணைப்பொன்றை நாங்கள் ஏற்படுத்த வேண்டும்.
அதேபோல, ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்துதான இறுதி பதினொருவர் அணியை தேர்வு செய்ய வேண்டும். எனவே எதிர்வரும் 12ஆம் திகதி டவுண்டனில் பாகிஸ்தான் அணியுடன் நடைபெறவுள்ள லீக் போட்டியில் அணித் தேர்வு குறித்து சரியான முடிவொன்றை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<