நிதி முறைக்கேடுகள் நடைபெற்றது 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டு வரையுள்ள காலப்பகுதியிலேயே அன்றி கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் அல்ல என்று தற்போதைய காற்பந்தாட்ட சம்மேளனத்திதின் தலைவர் திரு.அனுர டி சில்வா தெரிவித்தார். மேலும் தற்போதையாய நிர்வாகம் நிதி முறைக்கேடுகளுடன் எந்த ஒரு விதத்திலும் சம்மந்தம் இல்லை என்று கூறினார்.
காற்பந்தாட்ட சம்மேளனத்தின் திரு.ரொட்ரிகோ தலைவராகவும், திரு அனுர டி சில்வா தலைமை நிறைவேற்று அதிகாரியாகவும் இருக்கும்போதே நிதி மோசடிகள் நடைபெற்றது என்று ஊடகங்கள் தெரிவித்தன. பாராளுமன்ற பொது பணித்துறை விசேட குழு இது பற்றி ஆராய்ந்தமை குறிபிடத்தக்கது.
இக் குற்றசாட்டுகள் தவறு என்று நிரூபிக்கப்பட்டதன் பின்னரே எமக்கு நியமனம் வழங்கப்பட்டது எனத் தெரிவித்தார். இக்குற்றச்சாட்டுகள் 2006-2012 வரை மட்டுமே காணப்பட்டது.
போதி லியனகே, திலின பண்டிதரத்ன, காமினி ரந்தெனியம் மற்றும் சரத் வீரசேகர ஆகியோரே சம்மேளனத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களுக்குக் காரணம் என தெரிவித்தார்.
இவர்களின் செயலால் தற்போது நமது சம்மேளனம் பாராளுமன்ற பொது பணித்துறை குழுவினால் நெருங்கிய கண்காணிப்பின் கீழ் இயங்கி வருகின்றது. பல திட்டங்கழும், மற்றும் மற்றைய ஆவணங்களும் தீவிரமாகப் பரிசீலனை செய்யப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர் தவறு செய்தோர் யாரென்று இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை. ரகசிய பொலிஸ் பிரிவின் கீழ் இச்சம்பவம் தற்போதும் தீர விசாரிக்கப்படுகின்றது.
மேலும் இக்குற்றசாட்டு பற்றிய மேலதிக தகவல்களை நீதிமன்ற உத்தரவின் கீழ் பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. உயர் அதிகாரிகள் இதைப் பற்றி பேச தடைவிதிக்கப்பட்டுள்ளதால் இது பற்றி தகவல்களை உறுதி செய்யமுடியவில்லை எனத் தெரிவித்தார்.