கட்டாரில் நடைபெறவுள்ள 2022 பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் 2023 AFC ஆசிய கிண்ண போட்டிகளுக்கான மக்காவு அணிக்கு எதிரான 2ஆம் கட்ட தகுதிகாண் போட்டியில் நிசாம் பகீர் அலியின் பயிற்சியின் கீழான இலங்கை அணி எழுச்சி பெற எதிர்பார்த்துள்ளது. பூட்டானுக்கு எதிராக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற தகுதிகாண் போட்டி போன்ற மோசமான முடிவை தவிர்க்க இலங்கை கடுமையாக போராட வேண்டி உள்ளது.
முதல் கட்ட தகுதிகாண் போட்டியில் மக்காவுவிடம் வீழ்ந்தது இலங்கை
எதிர்வரும் 2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண கால்பந்து…
மகாவு அணிக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற முதல் கட்ட போட்டியில் இலங்கை அணி 1-0 என தோல்வியை சந்தித்தது. போட்டியின் இரண்டாவது பாதியின் 7ஆவது நிமிடத்தில் பிலிப் டுவார்ட் புகுத்திய கோல் மூலம் மக்காவு முன்னிலை பெற்றது. அந்தப் போட்டியில் இலங்கை அணி வெளியிட்ட திறமை குறித்து திருப்தி வெளியிட்ட பகீர் அலி, தமது அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி பதிலடி கொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“மக்காவுவின் ஆட்டம் பற்றி எமக்கு இப்போது தெரியும். நாம் சிறந்த முறையில் ஆட எதிர்பார்த்துள்ளோம். இளம் வீரர்கள் மற்றும் சிறந்த அணி ஒன்றுடன் எமது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம்” என்று அவர் குறிப்பிட்டார்.
“இளம் வீரர்கள் நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். இந்த அணி சிறந்த முறையில் ஆட ஆரம்பித்துள்ளது. பதலடி கொடுப்பதற்கு அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். இலங்கையில் சிறப்பாக ஆடுவார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம்” என்றும் அவர் நம்பிக்கையை வெளியிட்டார்.
வரும் செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவிருக்கும் மக்காவுக்கு எதிரான போட்டியில் இலங்கை வெற்றியை நோக்கி ஆட வேண்டியுள்ளது. தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேற போதுமான போட்டி முடிவொன்றை இலங்கை அணி பெறும் என்று பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோப்பா அமெரிக்கா தொடருக்கு பிரேசில் அணியில் நெய்மார் இல்லை
கட்டாருக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்ற பிரசிலியாவில்…
மக்காவு கோல்காப்பாளர் ஹோ மான்-பாய் மிக அரிதாக தவறிழைக்கும் நிலையில் இலங்கை அணி கோல் முயற்சியில் கடுமையாக போராடியது.
“போட்டியில் உச்ச திறமையை வெளிப்படுத்தினோம். பல வாய்ப்புகளை தவறவிட்டோம். ஆனாலும் அதுவும் போட்டியின் ஓர் அங்கமாகும். எமது எதிரணியை விடவும் சிறந்த போட்டி ஒன்றை ஆடியதாக நான் நினைக்கிறேன். இவை அனைத்துக்கும் பின் எமக்கு மீண்டும் ஒரு போட்டி கிடைத்துள்ளது. இந்தப் போட்டி பற்றி மீளாய்வு செய்து அதன்படி நாம் செயற்படுவோம்” என்று பகீர் அலி குறிப்பிட்டார்.
சுஹாயில் நடைபெற்ற போட்டியில் 1-0 என வெற்றிபெற்ற நிலையில் இலங்கைக்கு எதிராக கொழும்பில் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இரண்டாம் கட்டப் போட்டியில் மற்றொரு வெற்றியை எதிர்பார்த்து மக்காவு பயிற்சியாளர் லொங் சோ லெங் தனது அணியை இலங்கைக்கு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார்.
“வீரர்களிடம் இருந்து இதற்கு மேல் என்னால் எதிர்பார்க்க முடியாத நிலையில் போட்டியின் முடிவு மற்றும் வீரர்களின் ஆட்டம் பற்றி மிகவும் திருப்தி அடைகிறேன்” என்று லொங் குறிப்பிட்டார்.
மக்காவு வரலாற்றில் பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டி ஒன்றில் வெற்றி பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
“அவர்கள் 100 வீத திறமையை வெளிப்படுத்தினர். போட்டியின் முடிவு பற்றி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனினும், இது போதுமானது என்று நான் நினைக்கவில்லை. இந்தப் போட்டியில் 2-0 அல்லது அதற்கு மேல் எம்மால் பெற முடியுமாக இருந்தால் சிறந்த முடிவாக இருந்திருக்கும். எமக்கு இன்னும் 90 நிமிடங்கள் உள்ளன அதில் முயற்சி செய்து என்ன நடக்கும் என்று பார்ப்போம்” என்று அவர் கூறினார்.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<