இலங்கை மற்றும் துர்க்மெனிஸ்தான் அணிகளுக்கு இடையே இடம்பெறவிருக்கும் 2022 பிஃபா உலகக் கிண்ணத்திற்கான தகுதிகாண் முதல்கட்டப் போட்டிக்கு முன்னரான உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் சந்திப்பு இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமையகத்தில் இன்று (04) இடம்பெற்றது.
சொந்த மண்ணில் துர்க்மெனிஸ்தானை இலங்கை எவ்வாறு எதிர்கொள்ளும்?
இலங்கை கால்பந்து அணி, சுமார் 15 வருடங்களின் பின்னர் பிஃபா உலகக் …
இதில் இரு அணிகளது பயிற்றுவிப்பாளர்களும், அணித் தலைவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் நிசாம் பக்கீர் அலி, “எமது அணியின் தயார்படுத்தல்கள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீண்ட காலம் நாம் பயிற்சி பெற்றோம். சில சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளோம். நாம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக ஆடியது வீரர்களுக்கு நல்லதோரு அனுபவமாக இருந்தது.
எல்லாம் நடக்கும் வரை எம்மால் பார்த்திருக்க முடியாது. எமக்கு கிடைக்கும் அனைத்து போட்டிகளையும் நாம் பயன்படுத்தவும் முயற்சிக்கவும் வேண்டும். வென்றாலும், தோற்றாலும் நாளை சிறந்த போட்டி ஒன்றில் விளையாட அணி எதிர்பார்த்துள்ளது” என்றார்.
கடந்த காலங்களில் இலங்கை அணியின் தலைவராக மிகப் பெரிய அனுபவம் கொண்ட, மாலைத்தீவுகளில் தொழில்முறைக் கால்பந்து ஆடும் கோல் காப்பாளர் சுஜான் பெரேரா செயற்பட்டு வந்தார். எனினும், அந்தப் பதவி தற்பொழுது கவிந்து இஷானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பக்கீர் அலி பதிலளிக்கையில்,
“தலைவர் மைதானத்தில் மாத்திரம் இருக்க மாட்டார். அவர் அணியுடன் முழுமையாக இருக்க வேண்டும். சுஜானுக்கு மாலைதீவுகளில் சில கடமைகள் இருப்பதால் அவரால் அணியுடன் அனைத்து நேரமும் இருக்க முடியாது. அவர் தொடர்பிலோ, அவரது திறமை தொடர்பிலோ எந்த பிரச்சினையும் இல்லை. தனது வீரர்களின் அனைத்து விடயங்களிலும் பங்கேற்கும் தலைவரையே நான் எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்.
புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை அணித் தலைவர் கவிந்து இஷான் தமது அணி சிறந்த ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“எமது பயிற்சியாளரின் வழிகாட்டளின் கீழ் உடல் மற்றும் உள ரீதியில் அணி தயாராக உள்ளது. கால்பந்தை விரும்புபவர்கள் மற்றும் எமது நாட்டுக்காக ஒரு அணியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த நான் எதிர்பார்க்கிறேன். எமது அணி சிறந்த அணியாக தற்போது இருப்பதோடு அணி நாளை தமது முழுத் திறமையையும் வெளிப்படுத்தும்” என்று குறிப்பிட்டார்.
முக்கியமான போட்டிக்கு முன் இலங்கை கால்பந்து அணியின் மூவருக்கு காயம்
எதிர்வரும் 2022ஆம் ஆண்டு இடம்பெற உள்ள பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் 2023 AFC…
நாளைய போட்டி குறித்து துர்க்மெனிஸ்தான் அணியின் பயிற்சியாளர் அன்டேமிசே தனது கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
“எமது அணியை நாம் சிறந்த முறையில் தயார்படுத்தியுள்ளோம். நாளைய போட்டி கடினமாக இருக்கும். எந்த ஒரு போட்டியிலும் முதல் ஆட்டம் கடினமானதாக இருக்கும். நாம் இலங்கை அணியை ஆய்வு செய்ததோடு அந்த அணியில் சில புது வீரர்கள் உள்ளனர். நாம் டுபாயில் 5 நாட்கள் பயிற்சி பெற்றோம். (இலங்கையின்) கடிமான சூழலுக்காகவே நாம் இதனை செய்தோம்” என்று குறிப்பிட்டார்.
இலங்கையில் தமக்குக் கிடைத்த வரவேற்புக்கு துர்க்மெனிஸ்தான் அணித்தலைவர் அர்ஸ்லான்மிரத் அமனோவ் இந்த ஊடக சந்திப்பில் நன்றி தெரிவித்தார்.
“இந்த விஜயத்திற்காக இலங்கை மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். நாம் சில புது வீரர்களை கொண்டுள்ளோம். நாம் புதிய பயிற்சியாளரை கொண்டிருப்பதோடு சிறந்த போட்டி ஒன்றை வெளிப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்” என்று கூறினார்.
இலங்கை மற்றும் துர்க்மெனிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மோதல் நாளை (05) இரவு 7.30 மணிகு கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் ஆரம்பமாகும்.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<